திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். “திமுக, என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்றுதான் சொல்வோம். வேங்கைவயல் வழக்கில் தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை, வசனம், கருணாநிதி எழுதக்கூடிய வசனத்தையே மிஞ்சிவிட்டது. வேங்கைவயல் விவகாரத்தில் 900 நாட்களுக்கு பிறகு, இதை யாரும் நம்பப் போவது இல்லை. வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இத்தனை நாள்கள் இல்லாமல் இப்போது வேங்கைவயல் விவகாரத்தில் ஆடியோ, வீடியோ வெளியே வருகிறது. காவல் துறையின் குற்றப்பத்திரிகையை திமுக அரசின் திரைக்கதை வசனமாகதான் பார்க்கிறோம்.
உள்ளத்தில் பயம் இல்லை என்றால் எதற்காக சிபிஐ விசாரணையைத் தடுக்கிறீர்கள் இன்றைக்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவு படி சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. உண்மையாக, வெளிப்படையாக இருக்கும் திமுக அரசாக இருந்தால், ஏதற்கு சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும்? இதைக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. யாரின் கண்களை துடைக்க போலிச் செயல்களில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தியாக வேண்டும்
இன்றைக்கு திமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால், முதல் தகுதி படிக்காமல் இருக்க வேண்டும். அமைச்சராக முதல் தகுதி பொய் சொல்ல வேண்டும். பெரிய அமைச்சராக இருக்க ஊழல் செய்ய வேண்டும். இந்த மூன்று தகுதிகளும் இருக்கக்கூடிய திமுக அமைச்சரோ, திமுகவின் எம்எல்ஏவோ, திமுகவின் மக்கள் பிரதிநிதியோ, ஆர்எஸ்எஸ்தான் காந்தியைக் கொன்றார்கள் என்ற பொய்யை சொல்வதில் எந்த ஒரு புது விஷயத்தையும் நான் பார்க்கவில்லை.
அவர்கள் பொய்யிலே பிறந்தவர்கள். ஊழல் செய்வதற்காகப் பிறந்தவர்கள். அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை.” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. 750 நாட்கள் கப்சிப்.. 3 நாளில் எப்படி முடிச்சீங்க..சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!