ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணாமலை பல்கலைகழக மாணவி பாலியல்ழக்கின் குற்றவாளி ஞானசேகரனுடகால் ரெக்கார்ட் ஒரு வருடம் என் கையில் இருக்கிறது. அவன் யார் யாரிடம் பேசினான்? எத்தனை முறை பேசினான் ? 23ம் தேதி குற்றம் செய்த பிறகு யாரிடம் பேசினான் ? என்பதெல்லாம் என்னிடம் இருக்கிறது. 25ஆம் தேதி தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் நான் ஒரு நாள் வெளியிடத் தான் போகிறேன். பொறுமை காக்கின்றேன்.

நீ அந்த வேலையை செய்கிறாயா? என்று பார்க்கிறேன். எஸ்ஐடி அந்த வேலையை செய்கிறதா என்று பார்க்கிறேன். இப்பொழுது ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் இழுத்து இழுத்து அவர்களது செல்போனை பரிசோதித்துப் பார்க்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் எல்லாம் நான் எப்படி சிடிஆர்- ஐ வாங்கினேனோ அதேபோலத்தான் நீங்களும் வாங்கி இருப்பீர்கள். பத்திரிகையாளர்கள் செல்போனை ஏன் வாங்குகிறீர்கள்? ஆளுங்கட்சி நீங்கள். அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. ஒரு பத்திரிகையாளருக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் கிடைக்கும்.
இதையும் படிங்க: 'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!
அது லீக்கான எஃப்.ஐ.ஆர். சுத்தி சுத்தி வரும்போது பத்திரிகையாளர்களிடமும் வந்திருக்கும்.அப்போதுதான் பத்திரிகை நண்பர்கள் செய்தி போட முடியும்.இப்போது லீக்கான எஃப்.ஐ.ஆர் எப்படி பத்திரிக்கையாளர் செல்போனுக்கு வந்தது என்றால் லீக் பண்ணவர் யார் ? இன்றைக்கு கேள்வி லீக் பண்ணவன் யார் என்பதுதான்.காவல்துறை ரைட்டர் வெளிட்டு இருக்கலாம். அது ஆய்வாளருக்கு போய் இருக்கலாம். இப்போது ஒரு டிஎஸ்பி அந்த கேஸை நான் விசாரிக்கவில்லை என்று சொல்லிவிட்டு வெளியே போயிருக்கிறார்.

என் செல்போனிலும் தான் லீக்கான எஃப்.ஐ.ஆர் இருக்கிறது. என்னையும் கூப்பிடு. அந்த எஃப்.ஐ.ஆர் ஐ படித்து விட்டுத் தான் நானும் பேசுகிறேன். எனக்கு அனுப்பியது யார் ? எனக்கும் வீக்கானதைத் தான் அனுப்புகிறார்கள். அதை பார்த்துவிட்டு தான் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நீங்களோ? நானோ அதை பார்த்து தானே பேச முடியும். எஃப்.ஐ.ஆர் ஐ படிக்காமல் நான் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா? அதனால் மறுபடியும் அந்த எஸ்ஐடி அதிகாரிகளுக்கும், மாநில அரசுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். இப்படித்தான் நீங்கள் இன்வேஸ்டிகேஷன் பண்ண வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் எனக்கும் சிபிஆர்ஐ வெளியிடத் தெரியும். 23ஆம் தேதி அந்த குற்றச்செய்தல் செய்த பிறகு தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த ஞானசேகரன் யாரிடம் பேசினான் என்று சொல்வேன்.

24 ஆம் தேதி யாரிடம் பேசினான்? எப்.ஐ.ஆர் ஏன் தாமதமாக வெளியானது?து அதன் பிறகு அவனோடு பேசிய சம்பந்தப்பட்ட திமுக- காரர்கள் யார்? என்று எனக்கும் சொல்லத் தெரியும். ஆனால் நீங்கள் வேலை செய்து யார் அந்த சார் என்று கண்டுபிடியுங்கள். காவல்துறை வேலையை நானும், பத்திரிகையாளர்களும் செய்ய வேண்டாம். அதற்காக பத்திரிகை நண்பர்களை அழைத்து அவர்களை மிரட்டி செல்போனை கொடுத்துவிட்டுப் போ. நீ டெலிட் பண்ணி இருந்தால் கூட சாஃப்ட்வேரை போட்டு டெலிட் செய்ததை எல்லாம் எடுப்பேன் என மிரட்டக்கூடாது.
ஆனால் பத்திரிக்கையாளர்களின் செல்போனில் லீக்கான எஃப்.ஐ.ஆர் இருந்தால் அவர்கள் அவர்களது உங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். நான் பாராட்டுகிறேன். ஒரு பத்திரிகையாளர் செல்போனில் நாளைக்கு எஸ்ஐடி வந்து லீக்கான எஃப்.ஐ.ஆர் ஐ செல்போனில் கண்டுபிடித்து விட்டேன் என்றால் முதலமைச்சர் அவர்களே அந்த பத்திரிகை நண்பர்களை அழைத்து பாராட்டு பத்திரம் கொடுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியின் கண்ணியம் காக்கணும்.. நடத்தை விதிகள் கொண்டு வாங்க.. நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திமுக முடிவு!