ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒரு வெற்றி ஒரு டிராவுடன் இந்தியாவும், 2 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளை நிறைவு செய்தன. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2-வது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு சுருண்டது. 4 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது.6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுடன் இந்தியா களத்தில் உள்ளது.
இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் பும்ரா குவித்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட பும்ரா.. கம்மென்றாகிய கான்ஸ்டஸ்..
இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங் பேடி தான் இந்த சாதனையை வைத்திருந்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 விக்கெட்டுக்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அவரின் 47 ஆண்டுகால சாதனையை ஜஸ்பிரித் பும்ரா தகர்த்துள்ளார்.
ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் பும்ரா. கூடவே ஐசிசி வெளியிட்ட சிறந்த ஆவரேஜ் வைத்திருக்கும் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பும்ராவை முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘போதும் போதும்... உங்க விளையாட்டு...’ இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய கவுதம் கம்பீர்..!