பாகிஸ்தானின் லாகூரில் இன்று நடக்கும் ஐசிசி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் தொடங்கு முன் இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முக்கியமான ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தேசிய கீதத்தை தவிர்த்து இந்தியாவின் தேசிய கீதமான “ஜனகன மன” ஒலிப்பதை கேட்ட அரங்க ஊழியர்கள் உடனடியாக நிறுத்தினர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தேசிய கீதம் ஒலிப்பதற்குப் பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக ஒலித்தது. இதைக் கேட்ட அரங்கில் இருந்த ரசிகர்கள் பெருத்த கோஷமிடவே ஜனகனமன பாடல் சில வினாடிகளில் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை காலி செய்தது நியூசிலாந்து..!
இந்தியாவின் தேசிய கீதம் ஒலிப்பதைக் கேட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களும் சில வினாடிகள் குழப்பமடைந்தனர். ஆனால், அதற்குள் அந்த கீதம் நிறுத்தப்பட்டது, ரசிகர்களும் கோஷமிடத்தொடங்கினர். இதை நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்து, தங்கள் பக்கங்களில் பகிரத் தொடங்கியதால் இந்த காட்சி வைரலாகியது. “பாகிஸ்தான் விரோதமாக இருந்தாலும், அங்குள்ள மக்கள் இந்தியாவின் மீது பற்றாக இருக்கிறார்கள்”, பாகிஸ்தானுக்கு எப்போதும் இந்தியாவைப் பற்றிதான் நினைப்பு” என்றும் சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட நிகழ்வு இந்திய நெட்டிசன்களியைடேய வரவேற்பைப் பெற்றுள்ளது.

லாகூர் கடாபி மைதானத்தில் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஹெவிவெயிட் போட்டி நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தானைப் போலவே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் பரம வைரிகள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோர் அடுத்தக் கட்டத்துக்கும், அரையிறுதிக்கு செல்வதும் பிரகாசமாகும் என்பதால், வெற்றிக்காக கடுமையாக உழைப்பர். 2009ம் ஆண்டுக்குப்பின் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இல்லை. 2013 சாம்பியன்ஸ் டிராபில் நியூசிலாந்து, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

அதன்பின் 2017்ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்து அதிலுருந்தும் ஆஸ்திரேலியா வெளியேறியது. இப்போது 2025ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபிக்குள் வந்துள்ளது.
இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அணியால் பதற்றம்... உண்மையை போட்டுடைத்த கோலி..!