இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கேரியரின் ஆரம்ப நாட்களில் இருந்தபோது, ஒரு நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் ஒரு கணிப்பை வெளியிட்டு இருந்தார். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று சச்சினிடம் கேட்டபோது, அவர் ரோஹித் சர்மா - விராட் கோலியை சுட்டிக்காட்டினார். தற்போது அவரது கணிப்பு சரியென நிரூபணமாகியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். மறுபுறம், ரோஹித் ஷர்மா மிக வேகமாக 11,000 ரன்களை எடுத்து சச்சினை முந்த உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 284 போட்டிகளில் 276 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். ஜனவரி 28, 2002 அன்று இங்கிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த போட்டியில் இந்த ரன்களை எட்டிய முதல் பேட்ஸ்மேன் இவர்தான். இதற்குப் பிறகு, பல பேட்ஸ்மேன்கள் இந்த பட்டியலில் இணைந்தனர். ஜூலை 19, 2019 அன்று, பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டரில், விராட் கோலி 230 போட்டிகளில் 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டினார்.தற்போது இந்த இலக்கை எட்டிய வேகமான பேட்ஸ்மேன் ஆவார்.
தற்போதைய பட்டியலில், குறைந்த போட்டிகள் மற்றும் இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எடுத்ததன் அடிப்படையில், சிறந்த சச்சின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இப்போது சச்சின் அடுத்த சில நாட்களில் மூன்றாவது இடத்துக்கு நழுவக்கூடும்.ரோஹித் சர்மா 11 ஆயிரம் ரன்களை முடிக்க இன்னும் 134 ரன்கள் மட்டுமே உள்ளது. ரோஹித் 265 போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 10866 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா 134 ரன்கள் எடுத்தவுடன் சிறப்பு பட்டியலில் இடம் பெறுவார். அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவரால் பெற முடியும்.
இதையும் படிங்க: தேசத்துக்காகவே விளையாடுகிறார்கள்... கோலி, ரோஹித் பற்றி சிலாகிக்கும் கவுதம் கம்பீர்..!
ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியல்
விராட் கோலி (இந்தியா): 230 போட்டிகள், 222 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): 284 போட்டிகள், 276 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா/ஐசிசி): 295 போட்டிகள், 286 இன்னிங்ஸ்
சவுரவ் கங்குலி (ஆசியா/இந்தியா): 298 போட்டிகள், 288 இன்னிங்ஸ்
ஜாக் காலிஸ் (ஐசிசி/தென்னாப்பிரிக்கா): 307 போட்டிகள், 293 இன்னிங்ஸ்
குமார் சங்கக்கார (ஆசியா/ஐசிசி/இலங்கை): 340 போட்டிகள், 318 இன்னிங்ஸ்
இன்சமாம்-உல்-ஹக் (ஆசியா/பாகிஸ்தான்): 349 போட்டிகள், 324 இன்னிங்ஸ்
சனத் ஜெயசூர்யா (ஆசியா/இலங்கை): 363 போட்டிகள், 354 இன்னிங்ஸ்
மஹேல ஜெயவர்த்தனே (ஆசியா/இலங்கை): 394 போட்டிகள், 368 இன்னிங்ஸ்
இதையும் படிங்க: ’அவரைப்போல நான் திறமையாளர்களை தடுப்பதில்லை...’ரோஹித் சர்மாவை போட்டுத் தாக்கிய சூர்யகுமார் யாதவ்..!