2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் நேற்று ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணி, தொடகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சிஎஸ்கே ஆட்டம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன வார்த்தை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை கோபப்படுத்தியுள்ளது. முன்னதாக ஆட்டத்திற்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது, முதல் போட்டியில் 156 என்ற இலக்கை 20 ஓவர்கள் வரை சென்று சேஸிங் செய்து இருக்கிறீர்கள்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!!

இன்றைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக 146 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறீர்கள். இதுதான் உங்களின் கிரிக்கெட் ஆடும் வழி என்று எனக்கு தெரியும். ஆனால், இது காலாவதியான முறை என நீங்கள் நினைக்கவில்லையா? என்றார். அதைக் கேட்டு கோபமடைந்த ஸ்டீபன் பிளெமிங், எனது வழியில் ஆடும் முறை என்றால் எதை சொல்கிறீர்கள்? நீங்கள் அதிரடியாக ஆடுவதை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் அணியில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை.

நாங்கள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடவில்லை என்பதாலும், அதிர்ஷ்டம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் இவ்வாறு சொல்கிறீர்கள். ஆனால், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று முடிவில் பாருங்கள். நாங்கள் நேர்மறையான கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகிறோம். அதற்காக எங்களை ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர், நான் உங்களை ஒதுக்கி தள்ளவில்லை என்றார். அதற்கு மீண்டும் கோபமாக பேசிய ஸ்டீபன் பிளெமிங், நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். இது முட்டாள்தனமான கேள்வி என்றார். இந்த விவாதத்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: கோலியை தலையில் அடித்து கடுப்பாக்கிய பவுலர்... அடுத்து நடந்த டிவிஸ்ட்!!