சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெற்று வருகின்றன. இரண்டு பிரிவுகளாக அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. பாகிஸ்தானும், பங்களாதேசும் போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தலா 3 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் தங்கள் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் இங்கிலாந்து - ஆப்கன் இடையிலான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: பாக்., மைதானத்தில் இந்தியக் கொடியை பறக்கவிட்ட ரசிகர்... கொத்தாகத் தூக்கி கைது..!

லாகூரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 165 ரன்கள் குவித்த பென் டக்கெட் உட்பட இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, நட்சத்திர வீரர் ரஷீத் கானை அதிகம் நம்பி உள்ளது. அவரது சுழற்பந்து வீச்சும், அதிரடி ஆட்டமும் வெற்றியைத் தேடித் தரும் என அந்த அணி கணக்கிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் அணி மீது இனவெறி தாக்குதல்… குரங்குகளுடன் ஒப்பிட்டு வாசிம் அக்ரம் ஆவேசம்..!