2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் முதலிடத்தில் உள்ளார்.

அவர் நான்கு போட்டிகளில் 201 ரன்களை குவித்துள்ளார். ஆகவே அவர் தற்போது அரஞ்சு தொப்பியை வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூரியகுமார் யாதவ் உள்ளார். அவர் நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் குவித்ததன் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மூன்றாம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் உள்ளார். இவர் 191 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அபார பந்துவீச்சால் மும்பை அணியை வீழ்த்திய ஆர்.சி.பி... 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் இதுவரை 159 ரன்களை குவித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் அவர் அரை சதம் அடித்தால் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரணை முந்தி முதலிடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது. அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட முதல் 10 இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நூா் அகமது முதல் இடத்தில் உள்ளார். இவர் விளையாடிய 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

அவர் தான் தற்போது ஊதா தொப்பியை வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா தான் விளையாடிய 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மூன்றாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜ் உள்ளார். அவர் விளையாடி 4 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணியை சேர்ந்த கலீல் அகமது 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 6 இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: பந்துகளை தெறிக்கவிட்ட ஆர்.சி.பி. கேப்டன் பட்டிதார்... இமாலய இலக்கை எட்டுமா மும்பை இந்தியன்ஸ்?