விராட் கோலிக்கு தடை விதிக்கப்படுமா? அபராதம் விதிக்கப்படுமா? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில், இந்தியா தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெயில் அதிகமாக இருந்தது. 40 டிகிரியை தாண்டியதால் வெப்பம் அதிகமாக இருந்தது. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 19 வயதான தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டன்ஸ் தொடக்க ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்துவதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், இதற்கிடையில், விராட் கோலி கான்ஸ்டாஸை தோளில் அடித்தார். இது சர்ச்சையாகி விவாதம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் 10வது ஓவர் முடிவடைந்த பின்னர் இந்த சம்பவம் நடந்தது. ஓவர் முடிந்ததும், விராட் கோலி முன்பக்கத்தில் இருந்து வந்து சாம் கான்ஸ்டன்ஸ் தோளில் அடித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விராட் கோலி இதை வேண்டுமென்றே செய்தாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? என்பது குறித்து ஐசிசி விசாரிக்கும்.
இதையும் படிங்க: ‘சும்மா குதிக்க மாட்டேன்...’ விராட் கோலியின் கேரக்டரை பொசுக்கிய அஸ்வின்..!
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ‘‘ விராட்டின் இந்த தவறு குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும். இது விராட் கோலியின் தவறு. விராட் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். விராட் ஆடுகளத்தில் தனது வலதுபுறமாக நடந்து வந்து அந்த மோதலைத் தூண்டியுள்ளார். எதுவாக இருந்தாலும் என் மனதில் சந்தேகம் இருக்கிறது” என தூண்டியுள்ளார்.
இது விராட் கோலியின் வன்மத்தைக் காட்டுகிறது. அது அவருடைய தவறு என்று உறுதியாக நம்புகிறோம். நடுவரும் நடந்ததை பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறோம். கான்ஸ்டாஸைப் பொறுத்த வரை, எதிரில் இருந்து யாரோ வருவதை அவர் தாமதமாக உணர்ந்தார் போலும். இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் தலையிடுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விவாதத்தைக் கிளப்பி உள்ளனர்.
ஐசிசி விதிகளின்படி, கிரிக்கெட்டில் எந்த வகையிலும் உடல் ரீதியாக தாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் தாக்கிய வீரர் குற்றவாளியாக கருதப்படுவார். விசாரணையில், விராட் அல்லது கான்ஸ்டன்ஸ் ஆகிய இருவரில் யாருடைய தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர் 3 முதல் 4 டீமெரிட் புள்ளிகளை இழக்க நேரிடும்.
இதுகுறித்து, முன்னாள் டெஸ்ட் நடுவர் சைமன் டஃபலின் கூறுகையில், ‘‘இந்த விஷயத்தில் எந்த பெரிய நடவடிக்கையும் இல்லை. அதாவது இரண்டு வீரர்களும் இடைநீக்கத்தைத் தவிர்க்கலாம். ஏனெனில் இந்த சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘சும்மா குதிக்க மாட்டேன்...’ விராட் கோலியின் கேரக்டரை பொசுக்கிய அஸ்வின்..!