பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக இருப்பதால் அவர் ஓய்வு பெறுவார் என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொளுங்கள். அவருக்கு இப்போது அப்படியொரு எண்ணமே இல்லை. சரி, விராட் கோலி எப்போதுதான் ஓய்வு பெறுவார்?
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கோலி சரியாக விளையாடதது மட்டுமல்ல சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில், விராட் கோலி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏமாற்றம் அளித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விராட் கோலியின் ஒரே சாதனை பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் மட்டுமே. அந்த சதத்துடன், அவர் 9 இன்னிங்ஸ்களில் 23.75 என்ற மோசமான சராசரியுடன் 190 ரன்கள் எடுத்தார். எஞ்சிய 8 இன்னிங்ஸ்களிலும் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஓய்வு... உறுதிப்படுத்திய பிசிசிஐ..! கோலியும் காலி..!

இதனால் 200 ரன்களைக் கடப்பதே அவருக்கு சோதனையாகி விட்டது. விராட் கோலி அவுட்டான 8 இன்னிங்ஸ்களில், பெரும்பாலான நேரங்களில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் அவுட்டானார்.
விராட் தற்போது ஓய்வு பெறும் மனநிலையில் இல்லை. இப்போது கேள்வி என்னவென்றால், இவ்வளவு வெட்கக்கேடான விளையாட்டுக்குப் பிறகு விராட் அடுத்து என்ன முடிவை எடுக்கப் போகிறார்? தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. சிட்னி டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ரோஹித் ஓய்வு முடிவை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். ஆனால் விராட் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை.
தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு அடுத்த டெஸ்ட் தொடரை இந்தியா விளையாட உள்ளது. ரோஹிதோ, விராட் கோலியோ யாராக இருந்தாலும், அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால், சிவப்பு பந்து கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் அவரை தேர்வு செய்ய முடியாது.

ரோஹித் 2015 முதல் அந்தந்த மாநிலங்களுக்காக சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடவில்லை. ரஞ்சி டிராபியின் அடுத்த சீசன் பிப்ரவரி 2025 முதல் தொடங்குகிறது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து தொடருடன் மோதுகின்றன. அந்த தொடரில் ரோஹித், பும்ரா, விராட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் விராட், ரோஹித் ரஞ்சியில் விளையாடுவார்களா? என்பது பெரிய கேள்விக்குறியாகி.
இருவரும் ரஞ்சியை விட்டு வெளியேறினால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஏ போட்டிகள் இருக்கும். இருப்பினும், அதன் தேதிகள் ஐபிஎல் 2025 உடன் மோதலாம்.
இதையும் படிங்க: டீம் இந்தியாவில் பெரும் சர்ச்சை: 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்...' மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி..?