சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19 முதல் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறும். மொத்தம், இந்த 19 நாட்களில், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட 8 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியின் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. நாக் அவுட்டிலும் இந்த இரு அணிகளுக்கிடையே போட்டி இருக்கலாம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 -ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே முதல் போட்டி எப்போது? பரம எதிரிகளுக்கு இடையேயான இந்த மோதல் எந்த ஊரில், எந்த மைதானத்தில் நடக்கும்? 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தினாலும், இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் நடுநிலையான மைதானங்களில் நடைபெறும். தகவலின்படி, துபாய் மைதானம் நடுநிலையான இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. வரைவு அட்டவணையின்படி, இந்த போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறும்.
இதையும் படிங்க: ஏமாற்றிய கேரம் பந்து... அம்மாவின் நோய்... அஸ்வினை நெகிழச் செய்த மோடியின் கடிதம்
வரைவு அட்டவணையின்படி, சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா- பாகிஸ்தானுடன் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்தும், வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிப்ரவரி 19 அன்று நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தனது போட்டியை தொடங்கவுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் பிப்ரவரி 23-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஏ பிரிவில் இந்தியாவின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. போட்டியின் பி பிரிவு அணிகள் மோதும் அனைத்து போட்டிகளும் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.
இந்தியா அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்த இரண்டு நாக் அவுட் போட்டிகளும் துபாயில் நடைபெறும். இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால், டைட்டில் போட்டி லாகூரில் நடைபெறும். அடுத்த சில மணிநேரங்களில் சாம்பியன்ஸ் டிராபி 2025 ன் இறுதி அட்டவணை உறுதிப்படுத்தப்படும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை விட்டு வெளியேறும் விராட் கோலி..! எந்த நாட்டில் செட்டில் ஆகப்போகிறார் தெரியுமா..?