ஆஸ்திரேலயாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்து 10 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை பறிகொடுத்தது.
இந்தத் தொடரில் இந்திய அணி தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்து பேட்டர்களின் தோல்வி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் நட்சத்திர வீரர்கள், மூத்த வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் மோசமாக இருந்தது தோல்விக்கான முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

விராட் கோலி பெர்த் டெஸ்டில் மட்டும் சதம் அடித்திருந்தார், அதன்பின் 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 91 ரன்கள்தான் சேர்த்திருந்தார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் முற்றிலும் ஏமாற்றத்தை அளித்தார்.
முதல் டெஸ்டில் களமிறங்காத ரோஹித் சர்மா அடுத்த 3 டெஸ்ட்களிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 இன்னிங்ஸ்களிலும் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தனது மோசமான ஃபார்மால் 5வது டெஸ்டில் அவரே களமிறங்காமல் ஒதுங்கினார். செப்டம்பர் மாதத்தில் இருந்து ரோஹித் சர்மா 8 டெஸ்ட் போட்டிகளில் 164 ரன்கள்தான் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு சீனியர் பேட்டர்கள் இருவரும் பேட்டிங்கில் சொதப்பியது தோல்விக்கான பெரும்பங்காகப் பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா, கோலி இருவரையும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ரோஹித் சர்மாவும், கோலியும் டெஸ்ட் தொடர் முடிந்தபின் பெரிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இருவருமே இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு எனும் பேச்சுக்கை இடமில்லை என்று தெளிவாக அறிவித்துவிட்டனர். இருவரும் ஃபார்மில்லாமல் இருக்கும்போது அடுத்துவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு எவ்வாறு தேர்வு செய்வது என்ற கேள்வியை கிரிக்கெட் விமர்சகர்கள் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இழந்தபின், முதல்முறையாக பிசிசிஐ வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க உள்ளது.
பிசிசிஐ செயலராக இருந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராகிவிட்டதால் அவருக்குப் பதிலாக தேவஜித் சைகா புதிய செயலாக பதவி ஏற்றுள்ளார். பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கோலி, ரோஹித் விவகாரத்தில் முடிவெடுபதில் தயக்கம்காட்டக்கூடாது, உறுதியாக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ செயலர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இல்லாத புதிய டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், கோலி, ரோஹித் இருவரையும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மீது கவனம் செலுத்தச் சொல்லுங்கள் என்று தேர்வுக்குழுத் தலைவர் அகர்கருக்கு பிசிசிஐ புதிய செயலர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைனிக் ஜாக்ரன் நாளேட்டிற்கு பிசிசிஐ முன்னாள் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் “ ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய விரைவில் தேர்வுக்குழுகூட உள்ளது, பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்தபின் முதல்முறையாக ஆலோசிக்க பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுவும் கூடுகிறது. மூத்த வீரர்கள் கோலி, ரோஹித் இருவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் மோசமாக ஆடிய பெரிய அதிருப்தையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்குவதில் தயக்கம் காட்ட வேண்டாம் என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு பிசிசிஐ செயலர் கடுமையான உத்தரவிட்டுள்ளார். விளையாட்டைவிட எந்த வீரரும் உயர்ந்தவர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் வேண்டுமானால் சிலர் அனைவருக்கும் பிடித்த நபராக இருக்கலாம் ஆனால், பிசிசிஐ கிரிக்கெட்டை நாட்டில் நடத்துகிறது, தொடர்ந்து நடத்த வேண்டியநிலையில் இருக்கிறது. ஆதலால் எந்த வீரரும் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர்கள் இல்லை அவ்வாறு எந்த வீரரும் கருதக்கூடாது என்ற கடுமையான செய்தியை வழங்குங்கள் என அகர்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போது புதிய அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 47 ஆண்டுகால சாதனையை முறிடியத்த பும்ரா... ஆஸி. எதிராக அதிக விக்கெட்டுகள் குவித்து சாதனை..