ஏற்கனவே WhatsApp-ல் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோவைப் பதிவேற்றும்போது அதன் தரத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி செயல்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் பயனர்கள் ஒரு பிரத்யேக அமைப்பை இயக்குவதன் மூலம் எப்போதும் HD தர படங்களை அனுப்பவும் தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது Auto Download செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை நிலையான தரத்திலா அல்லது HD தரத்திலா என்பதை பயனர்களே தேர்வு செய்யும் ஒரு புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அம்சம் இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரூ.12 ஆயிரம் விலை குறைப்பு.. OnePlus 13R வாங்க இதுதான் சரியான டைம்!

இது முதலில் Beta வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அம்சம் WhatsApp-ல் settings-க்கு சென்று Storage and data–வில் Auto-download quality-க்கு சென்று அதில் Standard quality or HD quality-ல் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.

இதன்மூலம் WhatsApp-ல் பெறப்பட்ட மீடியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட Storage அளவைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. இது பயனர்கள் அதிகப்படியான மொபைல் டேட்டா பயன்பாட்டைத் தடுக்கவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. iOS-க்கான WhatsApp-லும் இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிம் ஆக்டிவ் பிளான்; ஏர்டெல், ஜியோ, விஐ எது பாமர மக்களுக்கு ஏற்ற திட்டம் தெரியுமா?