விவோ (Vivo) நிறுவனம் மார்ச் 31 ஆம் தேதி சீனாவில் Y300 Pro+ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. Y300 Pro+ ஆனது 90W வேகமான சார்ஜிங் கொண்ட 7,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும், Snapdragon 7s Gen 3 சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கசிந்துள்ள தகவல்களின்படி Y300 Pro+ ஆனது AMOLED டிஸ்ப்ளே, 12GB வரை RAM மற்றும் 512GB சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும். இது 50MP இரட்டை பின்புற கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும். இது Android 15-அடிப்படையிலான OriginOS 5 இல் இயங்கும்.

இதற்கிடையில், Geekbench இல் உள்ள பெஞ்ச்மார்க் பட்டியலில் Vivo Y300 GT, Y300 Pro+ உடன் இணைந்து வெளியிடப்படும் என்று கூறுகின்றன. Y300 Pro+ சிங்கிள்-கோரில் 1,208 புள்ளிகளையும் மல்டி-கோர் சோதனைகளில் 3,276 புள்ளிகளையும் பெற்றது. இது 12GB RAM மற்றும் Android 15 OS ஐ உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க: பெரிய பேட்டரி.. 24GB ரேம்.. 32MP செல்ஃபி கேமரா.. விவோ மொபைல் பட்டையை கிளப்புது
மேலும் இந்த மொபைல் ஆனது சிங்கிள்-கோரில் 1,645 புள்ளிகளையும் மல்டி-கோர் சோதனைகளில் 6,288 புள்ளிகளையும் பெற்றது. இது MediaTek Dimensity 8400 சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த செக்மென்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
இரண்டு மொபைல்ளும் போட்டி விலையில் பிரீமியம் அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 31 அன்று நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் மேலும் பல விவரங்கள் வெளியாகும்.
இதையும் படிங்க: ஏர் கூலர் வைத்திருப்பவர்கள் உஷார்.. இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!