கத்ரீனா கைஃப் யார் என தெரியாதவர்கள் கூட பெண்களின் அழகை வர்ணிக்க வேண்டும் என்றால் முதலில் சொல்லும் பெயர் இவருடைய பெயர் தான். அந்த அளவிற்கு இவரை விட இவரது பெயர் ஃபேமஸ். அந்த அளவிற்கு புகழ் பெற்ற கத்ரீனா கைஃப்பின் தொடக்க வாழ்க்கை அவரது பதினான்காம் வயதில் தொடங்கியது. ஆரம்பத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்து, விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். அதன் பின் லண்டனில் மாடலாக தோன்றி, லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற தனியார் நிறுவன விளம்பரங்களில் நடித்து விளம்பர உலகில் தனக்கென இடம் பிடித்தார்.

அதன்பின், கத்ரீனாவின் மாடலிங் நடிப்பை பார்த்து ரசித்த லண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் "கெய்ஸாத் கஸ்டாட்" அவரை வைத்து படம் எடுக்க முடிவு செய்து 2003-ல் "பூம்" என்ற படத்தில் நடிக்க வைத்தார். அடுத்து 2005ம் ஆண்டில் "சர்க்கார்" என்ற படத்தில் அபிசேக் பச்சனுக்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து, 2007ம் ஆண்டு "நமஸ்தே லண்டன்" படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து தனக்கென பல ரசிகர்களை உருவாக்கினார்.

இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த இவரது நடிப்பை பாராட்டி, ஸ்டார்டஸ்ட் விருது, ரித்தானிய இந்திய நடிகருக்கான விருது, ஸ்டைலுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகள்,சப்சே ஃபேவரட் கான் விருதுகள், ராஜிவ் காந்தி விருது என பல விருதுகளை பெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
இதையும் படிங்க: தாறுமாறா கிழிஞ்சி தொங்கும் ஸ்டைலிஷ் உடையில்... அழகில் சாய்த்த சமந்தாவின் ரீசென்ட் போட்டோஸ்!

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரே இடமான திரிவேணி சங்கம், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ளது. அங்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, முகேஷ் அம்பானி, ஆந்திர பவன் கல்யாண்,சினிமா நட்சத்திரங்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என பலர் இதுவரை புனித நீராடியுள்ளனர்.

ஏற்கனவே, நடிகை தமன்னா படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வைத்து வெளியிடப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், தற்பொழுது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் அங்கு சென்றது உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது குடும்பத்துடன் திரிவேணி சங்கமத்தில் கலந்து கொண்ட கத்ரீனா கைப் நீண்ட நேர காத்திருப்புக்கு பின் புனித நீராடியுள்ளார். இதுவரை இருந்த பொலிவை விட புனித நீராடிய பின் மன அமைதி மற்றும் சந்தோஷத்தில் இன்னும் அவரது பொலிவு முகத்தில் அதிகரித்துள்ளது.

கும்பமேளாவில் இதுவரை பல கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்திர பிரதேச அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் யோகி பாபுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே விளக்கம்!