சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் முதல் அடையாளம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினியை விடவும் சிறப்பான நடிகர்கள் உள்ளனர், ஆனால் அவர் அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு நடிகர் இருக்கிறாரா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். அதுவும் 75 வயதை நெருங்கும் ஒரு முதியவர், ஆனால் அவர் சண்டை போட்டால், டூயட் பாடினால் மனம் ஏற்றுக் கொள்கிறது என்றால் வேறு யாருக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்..

1975 ஆகஸ்ட் 18... அபூர்வ ராகங்கள் படத்தில் அந்த இரும்பு கதவை திறந்து கொண்டு திரையுலகிலும், தமிழ் ரசிகர்கள் மனதிலும் ரஜினி நுழைந்த நாள்.. இதோ 2025 ஆகஸ்ட் 14-ல் கூலி திரைப்படம் மூலம் தனது பொன்விழா ஆண்டில் தகதகவென்று ஜொலிக்கிறார் ரஜினிகாந்த்.. ஐம்பது ஆண்டுகள்... நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது. இடையில் எத்தனை நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்கள், திடீரென காணாமல் போயுள்ளார்கள். எத்தனை தொழில்நுட்பங்கள் மாறி இருக்கின்றன. எத்தனை எத்தனை புதுப்புது சிந்தனைகளோடு இயக்குநர்கள் வந்து போயுள்ளனர். தமிழ் சினிமாவின் வானத்தில் தான் எத்தனை மாற்றங்கள். ஆனால் மாறாத துருவ நட்சத்திரத்திரமாக இன்றளவும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

கூலி.. ரஜினியின் 171-வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், தெலுங்கு டாப் ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட ஸ்டார் உபேந்திரா, மலையாளத்தில் கலக்கி வரும் ஷௌபின் சாகிர், ஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் இன்ட்ரோ வீடியோ சமூக வலைதளங்களை ஒரு கலக்கி கலக்கியது. பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளதாக சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் சவுண்ட ஏத்து, தேவா வர்றாரு என்ற அடைமொழியோடு படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி கூலி படம் வெளியாகும் என்ற போஸ்டர் நெட்டிசன்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது. 50 ஆண்டுகள் கழித்து அதே ஆகஸ்ட் மாதத்தில் ரஜினியின் படம் வெளியாவது அவருக்கும் சரி, அவரது ரசிகர்களுக்கும் சரி விருந்தாக அமையப் போகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
இதையும் படிங்க: ரசிகருக்காக ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்..! வெளிநாட்டிலும் குறையாத மாஸ்..!