தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவர் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்ததோடு தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து வெளியான படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றபோதிலும், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.

இதையும் படிங்க: பட்டு புடவை... தலையில் கனகாமரப்பூ சும்மா தகதகன்னு மின்னிய கீர்த்தி சுரேஷ்!
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சில மாதங்கள் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்த கீர்த்தி, தற்போது மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நெட்பிலிக்சில் அதிரடி ஆக்ஷன் வெப் சீரிஸாக உருவாகியுள்ள அக்கா வெப் தொடரில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதாவது கீர்த்தி ஒரு கேங் ஸ்டார் லேடியாக நடித்துள்ளார்.

படங்கள் நடிப்பதில் மீண்டும் பிஸியாகியுள்ள கீர்த்தி... அவ்வப்போது சில வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை கர்லியாக மாற்றி ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பின் கூடுதல் கவர்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட்!