தமிழக வெற்றிக்கழகத்திற்கு அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூனா செயல்படப்போவதாக தகவல் வெளியான் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு நடந்தது. வி.சி.கவில் இருந்து விலகி இருந்த நிலையில் அண்மையில் ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சியில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் தவெகவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''ஆதவ் அர்ஜுன், விஜய் அவர்களுடைய கட்சியில் சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர் மீது விசிகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சி இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவர் விலகினார் என்பதுதான் நிஜம். ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் இயல்பாக இருப்பதுண்டு. அதேபோல அவருக்கு சில வழிகளை தந்தும் அதை அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம். நடிகர் விஜய் அவர்களை அர்ஜுன் சந்தித்தார் என்பது உண்மை.
இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா..? மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட விஜய்..!

அதை வைத்துக் கொண்டு அவர் கட்சியிலே இணையப் போகிறார் என்பதை ஊடகங்கள் ஊகங்களாக சில செய்திகளை பதிவிட்டு வருகின்றன. எப்படி இருந்தாலும் அவர் விஜய் அவர்களோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்... விசிக கட்சியில் துணை பொது செயலாளர் பத்துக்கும் மேற்பட்டோரை நாங்கள் நியமனம் செய்திருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் நிலப்பரப்பு அடிப்படையில், கருத்தியல் அடிப்படையில், நிர்வாக அடிப்படையில் 12 துணை பொது செயலாளர் நியமிக்கப்பட்டனர். அந்த வரிசையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் ஒருவர்தான் ஆதவ் அர்ஜூன்.

தேர்தல் வியூகங்களை வகுக்கவும், கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை இணைக்கவும் அவரக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகவே அவர் மட்டுமே துணை பொது செயலாளர் அல்ல.10 துணைப்பொதுச் செயலாளர்களில் அவரும் ஒருவர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த காலத்தில் இருந்தே பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாகவும் இருந்தார். தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், கூட்டணி தொடர்பான சில மாறுபட்ட கருத்துக்களை சொன்னதும், பேசியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு நெருக்கடியாக மாறியது. அந்த அடிப்படையில் அந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். பொதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உள்ளானவர்கள் உரிய விளக்கத்தை தந்து அந்த விளக்கத்திற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், அர்ஜுன் அவர்கள் உடனடியாக கட்சிய விட்டு விலகினார். இது ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்'' என ஆதவ் அர்ஜூனுக்காக வருத்தப்பட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!