சட்டமன்ற தேர்தலுக்காக தனியார் நிறுவனத்துடன் விஜயின் தவெக ஒப்பந்தம் போட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜயின் தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கிய சாமியை மாற்றிவிட்டு புதிய நிறுவனத்துடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் அடுத்த கட்டத்தை கட்சியின் செயல்பாடுகள் இருக்கும் எனவும், அவர் அளிக்கும் புள்ளிவிவரங்கள், தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அடுத்த கட்ட செயல்திட்டங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வாய்ஸ் ஆப் காமன்ஸ் மூலம் தமிழகம் முழுக்க கட்சி ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விசிகவில் இருந்து விலகிய உடனே ஆதவ் அர்ஜூன் தவெகவில் இணைவாரா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிறகு இது குறித்து பல்வேறு வதந்திகள் அலம் வந்தன. தற்போது ஆதவ் அர்ஜுனை முன்வைத்து தவெக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வரும் ஜான் ஆரோக்கியராஜ் வாரம் பேசியதாக கடந்த வாரம் சில ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த ஆடியோவில் புஸ்ஸி ஆனந்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ஜான் ஆரோக்கியராஜ். கட்சியின் செயல்பாடுகளையும், விஜய் பற்றியும் பேசியிருந்தார். புஸ்ஸி ஆனந்த் கட்சி நடவடிக்கைகளை முடக்குவதாகவும், தன்னை மட்டுமே பெரிய ஆளாகக் காட்டிக் கொண்டு விஜய்யின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் ஜாஜ் ஆரோக்கியராஜ்.
இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தவெக வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே தமிழகத்தில் பெற முடியும் என்று ஜான் ஆரோக்யராஜ் தெரிவித்ததாக அந்த ஆடியோக்கள் அதிர்ச்சி கிளப்பியது. புஸ்ஸி ஆனந்த தனது ஜாதியை முன்னிலைப்படுத்தியே பலருக்கும் பொறுப்புகள் வாங்கித் தருவதாகவும் கடும் குற்றச்சாட்டை கிளப்பியிருந்தார். தொடர்ச்சியாக மாற்றுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததே ஜான் ஆரோக்கியசாமி தான் என்றும் கூறப்படுகிறது.
அத்தோடு தவெகவில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் ஜான் ஆரோக்கியசாமி மூலமாகவே கசிவதாகவும் கட்சியினர் வேதனைப்பட்டனர். இந்த நிலையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முன்னாள் துணை பொதுச் செயலாளராக இருந்து கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியை இப்போது பெற்றுள்ளார். இதற்காக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூக ஒப்பந்தத்தில் ஆதவ்- விஜயும் இன்று மாலை கையெழுத்திட உள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு பூத் வாரியாகவும் கள ஆய்வு நடத்த வாய்ஸ் ஆப் காமண் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போது ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 5 லிருந்து 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்கு பின்னாலும் அர்ஜுனன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜான் ஆரோக்கியசாமியை ஆலோசகராக தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து விடுமோ? என்று ஐயத்துடன் இருந்த விஜய் தற்போது ஆதவ் அர்ஜுனனுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இருந்தபோதும் முழுதாக ஜான் ஆரோக்கியராஜின் ஒப்பந்தம் முடிவடையுமா? அல்லது அவரும் ஆதார் அர்ஜுனுடன் இணைந்து செயல்படுவாரா? என்கிற கேள்விகளும் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாற்றுக் கட்சியினர் தவெகவினரின் பின்புலம் அறிந்து அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைத்திருக்கிறார் விஜய். ஆதவ் அர்ஜுனா பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று ஆய்வு நடத்தி, வயது வாரியாக கட்சியில் இருப்பவர்கள், செல்வாக்கு, பலவீனம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாகவும் விஜய் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதி துணை முதல்வராகும் போது... விஜய் முதல்வராக கூடாதா? - நடிகர் ரவிச்சந்திரன் ஆவேசம்!