டெல்லியில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று பாஜக முடிவு செய்தது. ஆனால், அங்கு பாஜகவுக்கு எந்தக் கூட்டணியும் தேவைப்படவில்லை. (யாரும் வரவில்லை என்பது வேறு விஷயம்)

ஆனாலும், ஒரு சில பேருக்கு ஓரிரு சில சீட்டுகளை கொடுத்து வெற்றிகரமாக வீழ்த்தினார்கள். திமுக அரசை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் பாஜக டெல்லி தலைமை தீர்க்கமாக இருக்கிறது. ஆனாலும், டெல்லியை தமிழகத்தின் நிலைமை இல்லை என்பதை பாஜக டெல்லி தலைமை உணர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்துவது மிக மிக கடினம் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதற்காகத்தான் இந்த கூட்டணி பல முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் NDA ஆட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு கெத்தாக அறிவித்த அமித் ஷா.!!

அதனால்தான் தேர்தலுக்கு பல மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகிறது இன்று காலையில் நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா மேலோட்டமாக கூறி இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இப்போது ஊழலும், மதுபானமும் தடை செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது அதில் நாம் தமிழர் கட்சியும் கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.தேர்தலுக்கு பல மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சசிகலாவையும், ஓ.பி.எஸையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது என ஓரிரு நாட்களுக்கு முன்பும்கூட எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஆனால், டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே இங்கு, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸை அழைத்துக் கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அண்ணாமலை.

இதன் பொருள் என்னவென்றால், அவர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெறுவார்கள். ஓ.பி.எஸ் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார். டி.டி.வி.தினகரன் தனியாக அமமுக கட்சி நடத்தி வருவதால் அவர் அதிமுகவில் இணைய மாட்டார். ஆனால் அவரது கட்சி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும். அனைவரையும் அரவணைத்து செல்வதற்காகவும் அமித்ஷா இந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு ஒரு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பேசும்போது, 'எங்கள் ஒரே எதிரி திராவிட முன்னேற்ற கழகம்மட்டும்தான். தீய சக்தி திராவிட முன்னேற்ற கழகமும் ஒன்றுதான் எங்கள் எதிரி. மற்ற யாரும் எதிரி கிடையாது'' என்று சட்டப்பேரவை முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இந்த கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு மிகப் பெரும் சோதனையாக மாறும். இப்போதைய சூழ்நிலையில் அதிமுக, பாஜக, பாமக, நாதக, தேமுதிக கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை பாஜக தலைவராகத் தொடர்வார். அதிமுகவை சமாளிக்க ஒரு உயர் அதிகாரக் குழு நியமிக்கப்படும். வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் அந்தக் குழுவை வழிநடத்தலாம். அதிமுக அதன் கிளர்ச்சியாளர்களுடன் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அமித்ஷா டிவீட்டால் பரபரப்பு!!