இன்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி, சொட்டு மருந்தை வெங்கடேஷிடம் கொடுத்து டீ-ல் கலந்து ரத்னா, அறிவழகனுக்கு கொடுக்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வெங்கடேஷ் அந்த சொட்டு மருந்தை பியூன் ஒருவனிடம் கொடுத்து டீயில் கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான்.
பியூன் சொட்டு மருந்தை கலந்த டி கொண்டு சென்று ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்கிறான். அதன் பிறகு வெங்கடேஷ் வீட்டுக்கு வர இசக்கி உடம்பு முடியலன்னு சொல்லிட்டு எங்க போயிருந்தீங்க என்று கேள்வி கேட்க வெங்கடேஷ் ஒருவழியாக சமாளித்து விடுகிறான்.

இங்கே டீ குடித்த ரத்னா மற்றும் வெங்கடேஷ் என இருவரும் மயங்கி விட ரூமுக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர். நேரமாகியும் ரத்னா வீட்டுக்கு வராததால் கனியிடம் விசாரிக்க அக்கா வழக்கமா லேட்டா தான வரும் அதனால நான் வந்துட்டேன் என்று சொல்கிறாள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருவரும் மயங்கிய விஷயம் தெரிய வந்து வெங்கடேஷ் மற்றும் சௌந்தரபாண்டி மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர்.
இதையும் படிங்க: குல்பியால் சிக்கிய முத்துப்பாண்டி - இசக்கி; ரத்னாவுக்கு எதிராக நடக்கும் சதி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் !
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!