கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார், ஒரு படி மேலே போய் தனது கட்சியையே பாஜகவுடன் இணைத்தார். அப்போது மக்களின் நலனுக்காக ஏன் பிரதமர் மோடியுடன் இணைந்து பயணிக்கக்கூடாது என யோசித்ததாகவும், எனவே தனது கட்சியை மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசித்து பாஜகவுடன் இணைத்ததாகவும் கூறியிருந்தார். 
இந்த இணைப்பு கூட்டத்தின் போது சரத்குமாருக்கு எதிராக அவரது தொண்டர்கள் முழக்கம் எல்லாம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது பாஜகவுடன் கட்சியை இணைத்துவிட்டு முக்கிய பொறுப்போ, எம்.பி. சீட்டோ கிடைக்குமா என சரத்குமார் காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அந்த வழியில் அமமுகவையும் பாஜகவுடன் இணைத்துவிடுங்கள் என டிடிவி தினகரனுக்கு டெல்லி தலைமை தூது விட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோட பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இப்போது பாஜக கூட்டணியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அவரோட கட்சியை பாஜகவோட இணைக்கச் சொல்லி டெல்லியிலிருந்து தூது விடப்பட்டுச்சாம். கட்சியை இணைச்சா உங்களுக்கு தமிழக பாஜாகவில் ஒரு நல்ல சிறப்பான போஸ்டிங்கா கொடுத்துடுறோம். உங்க ஆதரவாளர்களையும் நல்லபடியா பார்த்துக்கிறோம்னு டீல் பேசி இருக்காங்க.
இதையும் படிங்க: காலில் செருப்பை போடாத அண்ணாமலை..! எகிறும் அரசியல் வேல்யூ..!

இதைக்கேட்டு பதறிப்போன டிடிவி, அய்யய்யோ சார்... அதெல்லாம் முடியாது சரியோ தப்போ நான் தனிக்கட்சி ஆரம்பிச்சுட்டேன். இப்ப என்னை நம்பி ஏராளமானவங்க இருக்காங்க, இப்ப இணைக்கிறது சாத்தியமில்லைன்னு கைய விரிச்சிட்டாராம். பிரிந்த அணிகள் என்றைக்காவது ஒரு நாள் இணையும், அப்படி இணையும் போது நாம தலைமைக்கு வருவோம்னு நினைக்கிறாராம் டிடிவி. அதற்காக தான் ஒவ்வொரு பேட்டிகளிலும் அதிமுக ஒன்றிணைவதைத் தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஜாடைமாடையாக சிக்னல் கொடுத்து வருகிறாராம்.
இதையும் படிங்க: ஒரு ஜீவனும் முன்வரவில்லை… நீங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா..? டிடிவி-க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!