நடிகர் அஜித் என்றாலே 'தல' என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். தற்பொழுது சில நாட்களுக்கு முன்பு "கடவுளே அஜித்தே " என்ற கோஷங்களும் பெருகி வந்தது. இதனைப் பார்த்து மன வேதனை அடைந்த அஜித் குமார், இனி தன்னை அப்படி யாரும் அழைக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அப்படி கூறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: விடாமுயற்சியால் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர்.. நடிகர் அஜித்தின் படம் பிளாப்-ஆ... ரசிகர்கள் அதிர்ச்சி..!

இப்படி இருக்க பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகர் அஜித்தை பிடிப்பது என்பது அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. இப்படி இருக்க, பல முயற்சிகளுக்கு பின் வெளியே வந்த திரைப்படம் தான் "விடாமுயற்சி" திரையரங்குகளில் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை எனவும் கூறிய லைக்கா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் இத்திரைப்படத்தினால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இப்படி இருக்க நடிகர் அஜித்குமார், தற்பொழுது தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் துபாய் கார் பந்தயத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் நடிகர் அஜித் கலந்து கொண்டு, ரேசில் தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார். இப்படி இருக்க தற்போது பிரான்ஸ் நாட்டில் நடிகர் அஜித் தனது அணியுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

அந்த வீடியோ பதிவில் பிரம்மாண்டமாக காணப்படும் ஆடிரேஸ் காருக்கு முன்பாக நடிகர் அஜித் நிற்பதும் காரை சுற்றி பார்த்து பின் அந்தக் காரை எடுத்து ஓட்டுவதுமான காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. அது மட்டுமல்லாது நடிகர் அஜித் தனது ரசிகர்களின் குழந்தைகளை கையில் ஏந்தி கேமராவுக்கு போஸ் கொடுத்திருக்கும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

'கடவுளே அஜித்தே' என்று கூறக்கூடாது என அஜித் சொன்னதால் ரசிகர்கள் இனி 'ரேசுனாலே அஜித்தே' என்று கூறலாமா என அனுமதி கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?