நடிகர் அஜித் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டார் என்றால் தலையே போனாலும் நடித்து கொடுத்து தான் வெளியே வருவார். அதுமட்டுமல்லாமல் அதிகமாக வெளியூர்களுக்கு பயணம் செய்வதிலும், மாணவர்களுடன் சேர்ந்து கண்டுபிடிப்புகளை கொடுப்பதிலும், அதிகமாக ரேஸ்களில் ஈடுபடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், தனது ரசிகர்களுக்காக மட்டுமே வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நடிகர் அஜித் பல போராட்டங்களை கடந்து தான் திரையுலகில் இன்று யாரும் அசைக்க முடியாத ஆலமரமாக நின்று கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: "என் பாடல் என் உரிமை"..! குட் பேட் அக்லி படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!

இத்தனை படங்களில் நடித்த அஜித் தற்பொழுது நடித்துள்ள படம் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் எனலாம். அந்த வகையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர் முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி".
இந்த திரைப்படத்தில் வரும் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் மிகவும் ஃபேமஸ் ஆகியுள்ளது. மேலும் "ஒத்த ரூபாய் தாரேன்" பாட்டிற்காக புதியதாக உரிமை கோரி பிரச்னை செய்து வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இருப்பினும் இந்த படம் அஜித்தின் ஃபேன் பாய் திரைப்படம் எனப்படுகிறது. அந்த அளவிற்கு அஜித் தனது நடிப்பை அபாரமாக இந்த படத்தில் காண்பித்துள்ளார்.

குட் பேட் அக்லி படம் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அஜித் தனது அடுத்த படத்தை எந்த இயக்குனருடன் கூட்டணி வைத்து நடிக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலாக இருக்க அதற்கான விடை தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி, சீதாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், மீனாட்சி சௌத்திரி, உடன் துல்கர் சல்மான் நடித்து வெளியான "லக்கி பாஸ்கர்" திரைப்படம் யாராலும் மறக்க முடியாது.

1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வெற்றி படமாக மாறியது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாக இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஹர்ஷா மகராவை பற்றியும் அவரது சிந்தனை பற்றியும், அவர் பணம் சம்பாதித்த விதங்களைப் பற்றியும், அவரைப் போல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கும். கடைசியில் பிரச்சினையில் சிக்கும் போது அதிலிருந்து வெளியே வர பொறுமையுடன் சிந்தித்து, எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாள வேண்டும் என்பதையும் இப்படம் மூலம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்கிய இப்படத்தின் இயக்குனரான வெங்கி அட்லூரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தற்பொழுது நடிகர் அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுவரை வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி தற்பொழுது சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான வேலைகளில் பிசியாக உள்ள இவர். அதன்பிறகு அஜித் குமார் உடன் இணைந்து படம் எடுக்க இருப்பதாகவும் அதற்கான கதையை அஜித்திடம் சொல்லி கால்ஷீட் பெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "படம் பிளாக்பஸ்டர் தான் ஆனால் தலையில் ஏத்திக்காத"..! அஜித் கொடுத்த நச் அட்வைஸ்..!