சினிமாவில் தனது திறமையை மட்டுமே நம்பி வந்து இன்று வெற்றி அடைந்த நாயகியாக வலம் வருபவர்தான் நடிகை அபிநயா. இவரின் தந்தை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் "ஸ்டாலின்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த அபிநயாவை கவனித்த ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து, சசிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்க அபிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அத்திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தேடி தந்ததை தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான "சம்போ சிவ சம்போ" திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான "ஹுத்துகாரு" என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவருடைய நடிப்பின் திறமைக்கு பரிசாக இதுவரை, இரண்டு பிலிம்பேர் விருதுகளை 'நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ' திரைப்படங்களுக்காக பெற்றார்.
இதையும் படிங்க: அபிநயாவின் கணவர் பெரிய தொழிலதிபரா...! ஒருவழியாக புகைப்படத்தை பகிர்ந்த அபி..!

இதனை அடுத்து, 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான "ஈசன்" திரைப்படத்திலும், 2011-ம் ஆண்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படத்திலும், தி ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ஜுனியர் என்.டி.ஆருடன், தெலுங்கு திரைப்படமான "தம்மு" என பல படங்களில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியாகி, தற்பொழுது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்ற திரைப்படம் "பனி". இப்படத்தின் கதாநாயகியை இருவர் சீரழித்ததால் அவரது கணவர், இருவரையும் தேடி பிடித்து, வெடி பொருளை வைத்து அவர்கள் உடலை சிதைப்பார். இப்படி இந்த திரைபடம் பயங்கர ஹிட் கொடுத்தாலும், இப்படத்தில் தனது மௌனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகை அபிநயா.

இதனை தொடர்ந்து, அபிநாயாவுக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடந்து கேட்டு கொண்டிருக்க, தான் 15 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவருடன் திருமணம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடிகை அபிநயாவுக்கு அவரது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மோதிரம் மாற்றிய இருவரின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இப்படி இருக்க, எப்பொழுது தனது காதல் கணவரின் புகைப்படத்தை அபிநயா வெளியிடுவார் என அனைவரும் காத்து கொண்டிருக்க திடீரென ஒருநாள் தனது வருங்கால கணவரான கார்த்திக் போட்டோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு அதன்கீழ் "The easiest yessss" என குறிப்பிட்டு இருந்தார் அபிநயா. இப்படி இருக்க, தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஷாக் ஆக, ஏப்ரல் 20ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி இருக்கும் கவலை வேண்டாம் மணமக்களை வந்து வாழ்த்தி செல்லுங்கள் என பதிவிட்டு உள்ளனர். இந்த நிலையில் இருவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அபிநயாவின் காதல் கணவரான கார்த்திக் ஐதராபாத்தில் பெரிய தொழிலதிபராக உள்ளார். இவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்களை தன் வசம் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசனை கட்டி பிடித்ததால் 3 நாட்கள் குளிக்கவில்லை..! பிரபல நடிகர் ஓபன் டாக்..!