மக்கள் மனதில் என்றும் செல்வாக்குள்ளவராக இருக்கும் சுந்தர் சி, கடந்த 1995 ஆம் ஆண்டு அருண் விஜயை வைத்து "முறைமாமன்" என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழக மக்கள் மனதில் இயக்குநராக பதிந்தவர். அது மட்டுமல்லாமல் இதுவரை ரசிகர்கள் இணையத்தில் தேடித் தேடி பார்த்தாலும் கிடைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" என்ற சிறப்பு வசனங்களுடைய திரைப்படமான 'அருணாச்சலம்' திரைப்படத்தையும் இயக்கியவர் இவரே.

இப்படி இருக்க, இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார். தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் "மூக்குத்தி அம்மன்-2" தயாராகி வரும் நிலையில், காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து "கேங்கர்ஸ்" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..!

இந்நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதனை அடுத்து, "குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே" என்ற பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த சூழலில், இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் படம் எப்படி இருக்கும், படத்தில் தங்களது அனுபவங்கள் அனைத்தையும் படக்குழுவினர் அறிவித்தனர். இவர்களை அடுத்து பேசிய இயக்குனர் சுந்தர்சி, நான் மக்களுக்கு பிடித்த படங்களை எடுத்து காண்பிப்பவன். என்னை மாதிரி ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி அடைய முடியாது. இதனை அடுத்து, வடிவேலுவை குறித்து பேசிய சுந்தர் சி, "சினிமாவில் நானும், வடிவேல் சாரும் இணைந்து 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். காமெடி மற்றும் நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் தான் என தெரிவித்தார்.

இந்த சூழலில், சுந்தர் சி-யை அடுத்து பேசிய வைகைப்புயல் வடிவேலு, நகைச்சுவையாக நடிகர் சுந்தர் சி, இவர் ஒரு கலகலப்பான மனிதர். அவரது பேச்சு நம்மை யோசிக்க வைக்கும். அப்படித்தான் ஒருநாள் கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 முடிந்தால் வேறு என்ன படம் எடுப்பீர்கள் என கேட்டேன்.
அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத சுந்தர் சி, அடுத்து எந்த படமும் கிடைக்கவில்லை என்றால் அரண்மனை 5 எடுப்பேன், அதற்கு அடுத்தும் எதுவும் கிடைக்கவில்லை என்றால் அரண்மனை 6 எடுப்பேன். இப்படி எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அரண்மனையே 10 பாகம் எடுப்பேன். அந்த அளவிற்கு பல பாகங்களை கையில் வைத்து இருக்கேன் அண்ணே..! என்றார். இதனை கேட்டு உடனே மனுஷனாடா நீங்கல்லாம் என்ற மாதிரிதான் இருந்தது" என கலகலப்பாக கூறினார்.
இதையும் படிங்க: வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..!