தமிழ், மலையாளம், தெலுங்கு என ஹிட் ஆன படம் சீதா ராமன். இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்தார். நடிகையாக மிருனாள் தாகூர் நடித்தார். இவர் இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக இவர், இந்தி மற்றும் மராத்தி மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான "முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்" என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!

2014ம் ஆண்டு தாக்கூர் மராத்தி இயக்கத்தில் வெளியான திரைப்படமான "விட்டி தண்டு" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலிவுட்டின் கலக்கலான சின்னத்திரை நாயகியாக வலம் வந்த மிருணாள் தாக்கூர் தெலுங்கு படம் மூலம் தென்னிந்திய முழுவதும் மிகவும் பிரபலமானார். தெலுங்கில் ரிலீஸான "சீதாராமம்" படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "ஹாய் நானா" என்ற படத்தில் நடித்திருந்தார். படங்களில் பிசியாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இதையும் படிங்க: நடிகை ஜனனிக்கு காதலருடன் நடந்த நிச்சயதார்த்தம்! தேவதை போல் மின்னிய போட்டோஸ்!