தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த இயக்குனர்களாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், அஷ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் வரிசையில் என்றும் முக்கிய இயக்குனராக நிற்பவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். பார்க்க சாதுவாக தெரிந்தாலும் படம் எடுப்பதில் என்றும் இவர் கில்லி தான். இவரது படத்தை விட இவர் படத்திற்காக செய்யும் ஃபிரமோஷனுக்காக மக்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருப்பர். டாக்டர், பிஸ்ட், ஜெயிலர் ஆகிய திரைப்பட பாடல்களுக்கு இவர் செய்த அலுச்சாட்டிய ஃபிரோமோக்கள் மக்கள் மனதில் இவரை நிலைக்க செய்தது.

இப்படி நகைச்சுவை உணர்வு கொண்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் திரையுலக பயணம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொடங்கியது. அதன்படி, 2005-ஆம் ஆண்டு "அழகி" என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், நாளடைவில் பதவி உயர்வு பெற்று அடுத்தடுத்து "ஜோடி நம்பர் 1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ்" என பல நிகழ்ச்சிகளில் சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பு குழுவிலும் முக்கிய இயக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!

இதனை அடுத்து 2010ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், நடிகை ஹன்சிகா ஆகியோரை வைத்து உருவான "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் டீஸர் வெளியாகி தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் பிரபலமானது. சிலம்பரசனின் ரசிகர்கள் இப்படம் எப்பொழுது வெளியாகும் என காத்து கொண்டிருந்த வேளையில், சில பல காரணங்களால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் மனமுடைந்த நெல்சன், தனக்கு வந்த படவாய்ப்புகளை இழந்து மீண்டும் அவர் இருந்த தொலைக்காட்சியில் இணைந்து சில நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார். பின்னர் 2018ம் ஆண்டு நடிகை நயன்தாராவை வைத்து நகைச்சுவை கலந்த ஹிட் படமான "கோலமாவு கோகிலா" என்ற பிரமாண்ட வெற்றி திரைப்படத்தினை இயக்கி, தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து நெல்சன் என்ன படம் எடுப்பார் என அனைவரும் காத்து கொண்டிருந்த வேளையில் கொரோனா பாதிப்பு அனைவரையும் கலங்கடித்தது.

அதன் பின், சோகத்தில் இருந்த மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் விதமாக நெல்சன் எடுத்த திரைப்படம் தான் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய "டாக்டர் திரைப்படம்" இப்படம் வெளியான பொழுது ஒரு புதுவித அனுபவத்தை மக்களுக்கு கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் சுவாரசியம் கலந்த படமாக இப்படம் அமைந்தது. மேலும் இப்படத்தில் அனிருத் இசை மிகவும் பிரமாதமாக இருந்தது. இப்படத்தை கொண்டாடும் வகையில், முன்னணி பத்திரிக்கை நிறுவனமான "தி டைம்ஸ் ஆஃப் இந்திய" சார்பில் சிறந்த இளம் இயக்குனருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "பீஸ்ட்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ரூ.650 கோடியை பெற்று சாதனை படைத்தது. இருந்தாலும் விட்ட இடத்தை பிடிக்க நினைத்த நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து மெகா ஹிட் திரைப்படமான "ஜெயிலர்" படத்தை இயக்கினார். இப்படத்தில் "அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தம்" என்றும் "காவாலையா" பாடலும் ரசிகர்களை கதிகலங்க செய்தது. இப்படத்தின் வெற்றிக்காக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன் இவருக்கு மிகவும் காஸ்லி காரை பரிசாரக அளித்தார்.

இப்படி இருக்க, தற்பொழுது நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை பிசியாக இயக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன். இந்த நிலையில் நெல்சனின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவரது அடுத்த படத்தை வம்சி தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குநர் பெயர் உங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில், தன்னை வைத்து இயக்க போகும் இயக்குநர் நெல்சன் தான் என மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார் என்டிஆர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், என்டிஆர், ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து வார் 2 என்ற ஹிந்தி படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களை முடித்த பின்னரே அவர் நெல்சன் படத்தில் நடிப்பார் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகருக்காக ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்..! வெளிநாட்டிலும் குறையாத மாஸ்..!