"கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல" என்ற திருப்பாச்சி பட பாடலுக்கு ஏற்ப, எந்த படத்தைப் பார்த்தாலும் அங்கு ஹீரோயினாக வந்து நிற்பவர் தான் நடிகை திரிஷா. இன்று பல பேர் தன்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று சொல்லிக் கொண்டு நாடு முழுக்க வளம் வந்தாலும், 90ஸ்களில் இருந்து இன்று வரை "லேடி சூப்பர் ஸ்டார் ஆக மட்டுமல்லாமல் லேடி பிளாட்டினம் சூப்பர் ஸ்டார்" ஆகவும் வலம் வருகிறார் நடிகை திரிஷா. அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பையும் அவருடைய நடிப்பையும் வர்ணிக்காத ஆட்கள் தமிழகத்திலேயே இருக்க முடியாது.

இப்படி, நாடு முழுவதும் திரிஷா என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் "அனுராதிகா" என்பது எத்தனை பேருக்கு தெரியும். சென்னையைச் சேர்ந்த த்ரிஷா என்கின்ற அனுராதிகா, சிறுவயதிலேயே தான் படிக்கும் பள்ளியில் நடத்தப்படும் அனைத்து நாடகப் போட்டியிலும் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்த பலரும், அவரது தாய் தகப்பனிடம் இதைப் பற்றி கூற, அவருடைய அம்மா த்ரிஷாவை படத்தில் நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு இடையில் 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார் திரிஷா.
இதையும் படிங்க: 40 வயசிலும் 20 வயசு யங் லுக்கில் த்ரிஷா; அல்ட்ரா மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ஹாட் போட்டோ ஷூட்!

இப்படி இருக்க 90 காலகட்டத்தில் "ஜோடி" என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை திரிஷா. சில படங்களில் பின்னணி கதாநாயகியாகவும் நடித்து வந்த த்ரிஷாவுக்கு திடீரென்று ஒரு நாள் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி கதாநாயகியாக களம் இறங்கிய த்ரிஷாவை இன்று வரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.

இவர் மௌனம் பேசியதே, மனசெல்லாம், லேசா லேசா, அலை, சாமி, உனக்கு 20 எனக்கு 18, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, கில்லி, ஆதி, இன்னும் பல படங்களில் நடித்து, தற்போது லியோ, விடாமுயற்சி போன்ற படங்களிலும் நடித்து, இன்று வரை தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இப்படி இருக்க நடிகை திரிஷாவிற்கு எப்பொழுது திருமணம் என அனைவரும் கேட்டுக்கொண்டு வரும் சூழலில், இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருக்கிறார் நடிகை திரிஷா. இப்படி எல்லாம் ஒருபுறம் த்ரிஷாவின் புகழ் பாடி கொண்டிருக்க, மறுபக்கத்தில் த்ரிஷாவை பற்றி நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் ராதாரவி, சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் தான் கிடைக்கும். ஆனால் கிடைக்கின்ற ஒரு வாய்ப்பில் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் மாற்றிவிடும். அதே போல் தான் த்ரிஷாவின் வாழ்க்கையும், காரணம் என்னவெனில், திரிஷா ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க கலந்து கொண்டார். ஆனால் அப்படத்தின் கதாநாயகி வருவதற்கு தாமதமானதால், அந்தக் கதாநாயகிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம் என முடிவு செய்த இயக்குனர், அங்கு இருந்த ஜூனியர் நடிகைகளில் திரிஷா அழகாக இருப்பதால் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து, அவரை நாயகி ஆகவே மாற்றி இன்றுவரை யாரும் அசைக்க முடியாத இடத்தில் அமர வைத்திருக்கிறார். "இப்பல்லாம் தனி ஆலு கூட்டமாறதும், கூட்டமாய் இருக்கிறவர்கள் எல்லாம் ஒத்தையாக மாறுவதும் ஒரே நாளில் நடக்கும்" என தான் நடித்த சர்க்கார் படத்தில் கூறப்பட்டது போல ஒரே இரவில் வாழ்க்கை மாறியது என்றால் அவர்தான் த்ரிஷா. ஒருவருடைய தலையெழுத்தில் என்னை எழுதி இருக்கிறதோ அது யார் நினைத்தாலும் மாறாது அவர்கள் கையில் வந்து சேரும் அதற்கு உதாரணம் த்ரிஷா எனக் கூறினார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளை திர்ஷாவிற்கும் அவரை பெருமையாக பேசிய ராதாரவிக்கும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: காசுக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?