காலம் மாறி போச்சி புத்தி மாறி போச்சி என்ற பாடலை அனைவரும் கேட்டதுண்டு. அதுபோல காலம் மாறி சென்று கொண்டே இருக்க, அனைவரது சினிமா பார்வையும் முன்னோக்கி செல்லும் என்று பார்த்தால் பின்னோக்கி சென்று கொண்டு உள்ளது. தற்பொழுது வெளிவரும் படங்களில் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பழைய பாடல்களை உபயோகிக்க தொடங்கினாரோ அதனை பின்னப்பற்றி எந்த இயக்குனர் படங்களை இயக்கினாலும் அதில் பழைய பாடல்களை பயன்படுத்துவதால் படங்கள் வெற்றி அடைகிறது. படத்தின் கதையால் ஹிட் கொடுக்கும் படங்களின் எண்னிக்கை குறைந்து, பழைய பாடல்களால் ஹிட் கொடுத்த படங்களை நம்மால் பார்க்க முடியும்.

அந்த வகையில், மார்க்கின் ஆண்டனி படத்தில் "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை போட்டு படத்தை ஹிட் ஆக்கினர். அதே போல், லியோ படத்திலும் "கரு கரு கருப்பாயி" என்ற பாடலை போட்டு அந்த படத்தையும் ஹிட் ஆக்கினர். இதனை அடுத்து தற்பொழுது வெளியான "குட் பேட் அக்லி" படத்தில் "ஒத்தரூபாய் தாரேன்" என்ற பாடலையும் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்ற பாடலையும் பயன்படுத்தி அந்த படத்தையும் ஹிட் ஆக்கி உள்ளனர். இப்படி இருக்க, இன்றைய கால இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எப்படிப்பட்ட படத்தை கொடுப்பது என தெரியாத இயக்குனர்கள் பழைய படங்களை ரீரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகினறனர்.
இதையும் படிங்க: விளக்கு பிடித்ததை பார்த்தியா... தவறாக பேசக்கூடாது...! சத்யராஜ் மகளுக்கு வார்னிங் கொடுத்த மதுவந்தி..!

இந்த ரீரிலீஸ் என்ற வார்த்தை வந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நடிகர் விஜய் இரண்டாவது ஏஐ தொழில்நுட்பம். இந்த இரண்டு காரணங்களால் தான் இன்று பழைய படங்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய் என்று 'தமிழக வெற்றி கழகம்' என கட்சியை உருவாக்கினாரோ, ஜனநாயகன் படத்திற்கு பின்பு என்று நடிக்கமாட்டேன் என அறிவித்தாரோ அன்று ஆரம்பமானது.
அவர் அப்படி கூறிய பின் திரையரங்குகளில் பட வரத்துகள் குறைய ஆரம்பித்தது. இதனை சரிக்கட்ட என்ன செய்வது என யோசித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஏ ஐ உதவியை பயன்படுத்தி பழைய படங்களை கொண்டு வந்தால் என்ன? என முடிவு செய்து, இன்று பாபா, ஆட்டோ கிராப், கில்லி, எம்.குமரன் s/o மகாலட்சுமி போன்ற படங்கள் அனைத்து படங்களையும் ரீரிலீஸ் செய்ய படம் வெற்றியடைந்து வருகிறது.

தற்பொழுது அந்த வரிசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான சச்சின் திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிகர் விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் அட்டகாசமான காமெடி மற்றும் காதல் கலந்த இந்த படம் 20 ஆண்டுகளுக்கு பின் தற்பொழுது ஏஐ உதவியுடன் டிஜிட்டல் தரத்தில் உயர்த்தி 4 கே வடிவில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது. படம் ரிலீஸ்-க்கு முன்பே டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.5 கோடி வசூல் வந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்னும் வசூலில் சாதனை படைக்க காத்திருக்கிறது விஜயின் சச்சின் படம்.

இந்த நிலையில், இப்படத்தை எஸ்.தாணுவுடன் இணைந்து இயக்குனர் மிஷ்கின் பார்த்துள்ளார். பின்பு இப்படத்தை குறித்து பேசிய அவர், "இந்த படம் மீண்டும் கல்லூரி காலத்திற்கு நம்மை அழைத்து சென்றது போல் இருந்தது. விஜய் நடித்த யூத் படத்தில்தான் எனது கெரியரை சினிமாவில் தொடங்கினேன். அதன்பிறகு 'சச்சின்' படம் வந்த போது என்னால் பார்க்க முடியவில்லை. ஆதலால் இப்போது தான் முதன்முதலாக இந்த படத்தை பார்த்தேன். உண்மையில் ரொம்ப ஜாலியான படம். காதலிக்கும் போது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அதை வைத்து அருமையான படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் ஹேண்ட்ஸ்சமாக இருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே அவரை மிகவும் அழகாக காட்டிய படம் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த காலகட்டத்தில் விஜய் போன்ற நடிகர் சினிமாவை விட்டு செல்வது மிகப்பெரிய இழப்பு. இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் அவர். அரசியல் வேலைகளை பார்த்தாலும் அவ்வப்போது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம்..! இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது..!