"அதிகாலை பூக்கள்" பாடலை கேட்டால் உடனியாக நினைவுக்கு வருபவரும் "தி கர்மா தீம்" என்ற பாடலை கேட்டாலும் நம் கண்முன் வருபவர் அழகின் மொத்த உருவமான நடிகை சமந்தா.. சிரிப்பில் குழந்தை முகத்தை காண்பித்து, நடிப்பில் தனக்குள் இருக்கும் குஷ்பூவை வெளிக்காட்டி, நடனத்தின் மூலமாக பலரை கவர்ந்து தனக்கென ரசிகர்களை உண்டாக்கியவர் சமந்தா.

யசோதா என்ற பெயரில் தனது வாழக்கையை ஆரம்பித்தவர், படங்களில் நடித்ததன் மூலம் சமந்தாவாக மாறி பல ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருந்து வருகிறார். இப்படி சமந்தாவாக மாறிய இவரின் முதல் படம் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படம். இதன் மூலமாக சினிமா துறையில் அறிமுகமாகி "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

இப்படி மகிழ்ச்சியாக பல படங்களில் நடித்து, பல விருதுகளை பெற்ற சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் திருமண வாழக்கையை குறித்து பல கனவுகளுடன் வாழ ஆரம்பித்தவர்கள் சிறிது காலங்கள் சென்றபின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை அடுத்து, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து ரூ.200 கோடி பட்ஜெட்டில் இரண்டாவது முறையாக காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தாவோ, தன் வலிகளை மறைத்து ஈஷா யோகா மையம் போன்ற பல இடங்களுக்கு மன அமைதிக்காக சென்று வருகிறார். இந்த நிலையில், தற்பொழுது சமந்தா, "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க இருப்பதாகவும், தான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது, இனி சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என்றெல்லாம் கூறி, ஜிம்முக்கு சென்று 110கிலோ எடையை தூக்கி வெறிகொண்ட வேங்கையாய் தன்னை தயார் படுத்தி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, ஆலா மொடலைண்டி, ஜபர்தாஸ்த், கல்யாண வைபோகமே, ஓ! பேபி, பித்த கதலு, அன்னி மஞ்சி சகுனமுலே, சாம் ஜாம் போன்ற படங்களை இயக்கி, ஒரு இயக்குனரின் சிறந்த முதல் படத்திற்கான நந்தி விருது, சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது – அல மொடலைண்டிக்காக தெலுங்கு, ஹைதராபாத் டைம்ஸ் திரைப்பட விருதுகள் 2011,சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருது, முதலிய விருதுகளுக்கு சொந்தக்காரியான இயக்குநர் நந்தினி ரெட்டி தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவரது பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தாவை பார்த்து 'உங்களுடன் மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்' என்று நந்தினி ரெட்டி பதிலளித்துள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இருக்கும் சமந்தாவின் ரசிகர்கள் "எழுந்திரு கபிலா இது நம்ப காலம்" என அவருக்கு சியரப் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு... 110 கிலோவை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டிய சமந்தா..!