தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் வரிசையில் தற்பொழுது இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகிறது. இப்படி இருக்க, அவரது பிறந்த நாள் அன்று இரண்டு ட்ரீட் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி தற்பொழுது சிவா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது.

முதலில் சிவகார்த்திகேயன் பிறந்தாள் அன்று, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியிடப்பட்டது. அதன்படி அப்படத்தின் பெயர் தமிழில் "மதராஸி" என்றும் இந்தியில் "தில் மதராஸி" என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து,இப்படத்திற்கு 'மதராஸி' என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்றார். இதனால் இப்படத்திற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!

இதனை அடுத்து ரசிகர்களின் காத்திருப்புக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பராசக்தி' படத்தை இயக்கி வருவது அனைவருக்கும் தெரியும். இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளையும் சிவா பிறந்தநாள் அன்று வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார் கொங்கரா.இந்த நிலையில், சிவாவுடன் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கும் வேளையில் மேலும் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அதன்படி, மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.பசில் ஜோசப் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவர். பல படங்களில் பிசியாக இருக்கும் இவர் தற்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் கூறுகின்றனர்.

இப்படி, பராசக்தி படம் பல சிறப்புகள் வாய்ந்த படமாக இருந்தாலும், இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது தான் கூடுதல் சிறப்பு.
இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!