கடந்த ஒன்பது மாதங்களாக இணையத்தையே அலற வைத்த பெயர் என்றால் அது சுனிதா வில்லியம்ஸ் என்ற பெயர் தான். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று ஒன்பது நாட்களில் வீடு திரும்ப வேண்டியவரை ஒன்பது மாதங்களாக சிக்க வைத்து விட்டிர்களே என நாசாவை மக்கள் கேள்வி கேட்காத நாட்களே கிடையாது. கல்பனா சாவ்லா போல இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸும் செய்திகளாக மாறிவிடுவாரோ என்ற பயம் அதிகரிக்க அனைவரும் அவருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இப்படி பட்டவர் இன்று வானத்தின் பல மயில்களை கடந்து சுதந்திர காற்றை சுவாசித்து இருக்கிறார்.

சற்று விரிவாக பார்த்தால், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விண்வெளி வீராங்கனையாகப் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்ய அனுப்பப்பட்டனர். 9 நாட்களில் பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள் மீண்டும் தொழில்நுட்பச் சிக்கலால் 286 நாட்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையும் படிங்க: விராட் கோலி பற்றி மாதவன் போட்ட இன்ஸ்டா போஸ்ட்... எச்சரித்த அனுஷ்கா சர்மா!!

இந்நிலையில், கண்டிப்பாக சுனிதா வில்லியம்ஸை அழைத்து வருவேன் என சபதம் எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் அவரை மீட்க முடிவு செய்தார். அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த "நிக் ஹேக்" மற்றும் ரஷ்யாவை சேர்ந்த "அலெக்சாண்டர்" ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று "சுனிதா வில்லியம்ஸ்" மற்றும் "புட்ச் வில்மோர்" ஆகியோரை "டிராகன் 9" விண்கலத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு அழைத்து கொண்டு பூமிக்கு புறப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதிக்கு டிராகன் 9 விண்கலம் வந்து சேர்தது. டிராகன் விண்கலத்திலிருந்து கையை ஆட்டியபடி வெளியே வந்த சுனிதா வில்லியம்சை பார்த்த பிறகுதான் மக்களுக்கு உயிரே வந்தது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்கிற்கும் மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து, இந்தியாவின் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் தங்களது வாழ்த்துக்களை சுனிதா வில்லியம்ஸுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களை தொடர்ந்து நடிகர் மாதவனும் தனது எக்ஸ் தல பக்கத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், "9 மாதங்களுக்கு பின் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பதிவாக வெளியிட்டு வருகிறார்கள். இதில், நடிகர் மாதவன் சுனிதா வில்லியம்ஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், பூமிக்கு மீண்டும் வந்த எங்கள் அன்புள்ள சுனிதா வில்லியம்சுக்கு வாழ்த்துக்கள். எங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன...உங்களைப் பாதுகாப்பாகவும் புன்னகையுடனும் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது. 260க்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு விண்வெளியில் இருந்து மீண்டு வந்த செயல்கள் அனைத்தும் கடவுளின் கிருபை.

அதுமட்டுமில்லாமல் மில்லியன் கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் உங்களை இங்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது. என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராதிகாவை பற்றி பேசினால் இனி சும்மா இருக்கமாட்டேன்.. என் சுயரூபத்தை பார்ப்பீர்கள்.. மகள் ரயான் காட்டம்..!