தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது.
இதையும் படிங்க: தங்கச் செயினை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்... தங்கம் பெருசில்ல...படத்தில் கதை தான் பெருசு...!

இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும் பாலாவின் "தாரை தப்பட்டை" படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார்.

பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த நிலையில் அவரது உதவியாளரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் வரலட்சுமியை விசாரிக்க, அதிலிருந்து நிரபராதியாக மீண்டு வந்தார்.

இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது 40-வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் அம்மாவுடன் முதலில் கொண்டாட நினைத்த வரலட்சுமி, பின்ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும், ஆசிரமத்தில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், வரலட்சுமி எதிலுமே புதுமையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதே அவரை ரசிக்க காரணம் என புகழ்ந்து வருகின்றனர் .
இதையும் படிங்க: ஓடிடிக்கு வரும் பாலியல் தொழிலாளியின் கதை... ஆஸ்கர் விருதால் அதிக எதிர்பார்ப்பு!!