விஜய் சேதுபதியின் நடிப்பை யாராலும் குறை கூற முடியாது. அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கும். தனது ஆரம்ப வாழ்க்கையிலிருந்து துணை நடிகராக நடித்து வந்தவர், தனது கடின உழைப்பால் தற்பொழுது கதாநாயகனாக மாறி, இன்று மிகப்பெரிய ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.அதுமட்டுமல்லாமல் பிக்பாஸிலும் தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.

இவரைப் போலவே, அனுராதா என்ற தனது பெயரை திரிஷாவாக மாற்றிக்கொண்டவர் நடிகை த்ரிஷா,ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்து, தன்னுடைய வாழ்வில் கடின உழைப்பால் நடிப்பின் திறமையை வெளிக் கொண்டு வந்து, இன்று வரை அசைக்க முடியாத லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இணையத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள்... பிக் பாஸ் முடிந்தும் மக்கள் கொண்டாட்டம்...!

இப்படி நடிகர் அஜித், விஜய், விக்ரம், போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் மட்டுமே நாயகியாக நடித்து வந்த திரிஷா, முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்து தனது அசாத்திய நடிப்பை வெளிக்கொணர்ந்து, இது நடிப்பா அல்லது காதலா என்று சொல்லக்கூடிய அளவிற்கும் ரசிகர்கள் உண்மையாகவே இருவரையும் சந்தேகம் படும்படியும் உருவான திரைப்படம் என்றால் அது 96.

தமிழ் திரையுலகில், இயக்குநர் சேரன் இயக்கிய 'ஆட்டோகிராப்' படத்திற்குப் பிறகு, மிகவும் பிரம்மாண்டமாக தனது பள்ளியின் காதல் நாட்களை நினைவு கூறும் வகையில் உருவாக்கப்பட்ட படம் என்றால் அது "96". தான் பள்ளி பயிலும் பொழுதே த்ரிஷாவை காதலிக்கும் விஜய் சேதுபதி, தனது பெற்றோரால் அவரை விட்டு விலகி, சென்னை பட்டணத்தில் குடியேற, நடிகை திரிஷா தனது காதலனான விஜய் சேதுபதி வருவார் என்று காத்துக் கொண்டிருப்பார். பின் எல்லா நண்பர்களும் ஒன்று சேர்ந்து, "கெட் டு கெதர்" நிகழ்ச்சியை வைக்க அங்கு வந்த த்ரிஷாவிற்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள், மற்றும் வெளிவரும் உண்மைகள் பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்ணீரை குளம் போல் காட்சியளிக்க வைத்தது.

இப்படியாக இந்தப் படம் பார்க்க நன்றாக இருந்தாலும் பார்க்க...பார்க்க, அவரவர்களுடைய முதல் காதலை நினைவு கூறும் வகையிலேயே அமைந்ததால் இப்படத்தை இயக்கிய பிரேம் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. மீண்டும் 96 படத்திற்கான அடுத்த பாகங்கள் வெளியிடுவாரா என மக்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் அப்படத்திற்கான அப்டேட் தற்பொழுது கிடைத்து உள்ளது.

கடந்த ஆண்டு வெளிவந்த "மெய்யழகன்" திரைப்படத்தை தொடர்ந்து தனது "96" திரைப்படத்தின் "இரண்டாவது பாகத்தை" எடுக்க போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இயக்குனர் பிரேம்குமார். மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு "இது காதல் கதையாக இருக்காது வேறு வித்தியாசமான கதையாக இருக்கும்" என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரேம்குமார் இயக்கும் "96" படத்தின் இரண்டாவது பாகத்தை, வேல்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்திற் குண்டான கதைகள் அனைத்தையும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷிடம் இயக்குனர் கூறியிருக்கிறார். இந்தக் கதையைக் கேட்ட ஐசரி கே கணேஷ்க்கு கதை மிகவும் பிடித்து போக,அடுத்த நாளே இயக்குனர் பிரேம்குமாரை நேரில் சந்தித்து "ஐந்து பவுன்" தங்கச் செயினையும் புதிய "வாட்ச்" ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். பின்பு இயக்குனர் பிரேம்குமாரிடம் பேசிய ஐசரி கே கணேஷ், இதுவரை தன்னுடைய வாழ்க்கையிலேயே இப்படி ஒரு கதையை கேட்டதே இல்லை என்றும் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என்றும் கூறி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, விரைவில் படத்திற்கான முழு அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஒரு இரவு தான்.. திரிஷாவின் வாழ்க்கை இப்படி ஆனது... விதை டைரக்டர் போட்டது - ராதாரவி ஓபன் டாக்..!