இந்திய திரையுலகில் நடிகைகளின் சம்பளம் குறித்ததான போட்டிகள் அதிகரித்து உள்ளது. இப்படியிருக்க நடிகைகள் சம்பளத்தில் டாப் நம்பர் ஒன்றாக இருக்கும் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரை பின்னுக்கு தள்ளி வருகின்றனர் பல நடிகைகள். இப்படி இருக்க நடிகை ஜோதிகா மற்றும் ராம்யா போன்ற நடிகைகள் சமிபத்தில் ஹீரோக்களுக்கு இணையாக எங்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
இந்த நிலையில். தற்பொழுது பல நடிகர்களின் சம்பள லிஸ்ட்கள் வெளியாகி உள்ளது. அதில் சம்பளத்தில் டாப் நம்பர் ஒன்றாக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

இதுவரை அல்லு அர்ஜுனை தெரியாதவர்கள் கூட தற்பொழுது உலகம் முழுவதும் தெரிந்து இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் 'புஷ்பா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் இவரது பெயரை வைத்தும் சூரியின் காமெடியான "புஷ்பா புருஷன்" என்ற காமெடிகளை இணைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி பல திரைப்படங்களில் வலம் வந்த அல்லுஅர்ஜூன் திரையுலகில் தெலுங்கு மொழி திரைப்பட நடிகர் ஆவார்.
இவரை பற்றி கூறவேண்டுமானால் தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என பல அவதாரங்களை உடையவராக கூறலாம். அதுமட்டுமல்லாமல் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்ற இவர், தற்பொழுது ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ.300 கோடி பெற்று நடிகர்களின் சம்பள வரிசையில் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.
இதையும் படிங்க: அமீர் கான் மூன்றாவது திருமணத்தில் சிக்கல்... வம்பிழுத்து அழுது சென்ற இரா கான்...!

இரண்டாவது இடத்தில் தமிழக மக்களால் அன்புடன் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய். இவர் தனது ஆரம்ப கால சினிமா பயணத்தில் அவரது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து சினிமாத்துறையில் வந்தார். பின் விஜயகாந்துடன் நடித்து படிப்படியாக உயர்ந்து வந்த விஜய், இன்று தனக்கென பல ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஜனநாயகம் படத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலுக்கு செல்ல இருக்கிறார். இப்படி இருக்க தற்பொழுது ஒரு படத்திற்கு நடிகர் விஜய் "ரூ.275 கோடி" சம்பளம் பெற்று வருகிறார்.

மூன்றாவது இடத்தில் பாலிவுட் கோலிவுட் திரையுலகில் அகில உலக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் 'ஷாருக்கான்' இடம் பெற்று இருக்கிறார். இவரது பெயரை உச்சரிக்கும் பொழுது அனைவரது நினைவுக்கும் வருவது ட்ரெயின் மீது ஏறி "தக்க தைய தைய தையா" என்ற பாடலுக்கு அவர் ஆடிய நாடனமும் பாடலும் தான். குறிப்பாக இவரது நடிப்பில் 'ஹாப்பி நியூயர்' படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தாலும், தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான், இந்தியா மட்டுமல்லாது உலகும் முழுவது ஃபேமஸ் ஆனார்.
குறிப்பாக அப்படத்தில் வந்த "ராமையா" பாடலும் ஹிட் ஆனது. அவரது வேறொரு படம் என்றால் அது "சென்னை எக்ஸ்பிரஸ்" தான் இந்த படமும் பலரது கவனத்தையும் ஈர்த்த படம் எனலாம் . இப்படி இருக்க ஷாருக்கான் ஒரு படத்திற்கு "ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி" வரை சம்பளமாக பெற்றுவருகிறார்.

நான்காவது இடத்தில் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படம் நடிகர் "ரஜினிகாந்த்", இவர் 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.
அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்து வருகிறார்.
தற்பொழுது 'கூலி' மற்றும் 'ஜெயிலர் 2' போன்ற படங்களை தன் கையில் வைத்திருக்கும் ரஜினிகாந்தின் ஒரு படத்திற்கான சம்பளம் "ரூ.125 முதல் ரூ.270 கோடி" ஆக உள்ளது.

ஐந்தாவது இடத்தில் உலக ஆக்ஷன் நாயகனான 'அமீர்கான்', ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக தமது எட்டு வயதில் "யாதோன் கி பாராத்" என்ற நிகழ்ச்சியில் அவரது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பிறகு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த "ஹோலி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனை அடுத்து அமிர்கான், கயாமத் சே, கயாமத் தக்,தில் ஹை கே மந்தா நஹின்,ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர், ஆண்டாஸ் அப்னா அப்னா, ரங்கீலா, லகான், தில் சஹ்தா ஹை, ரங் தே பசாந்தி, தாரே ஜமீன் பர், கஜினி, 3 இடியட்ஸ் மற்றும் தங்கல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து, 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் பத்மபூஷன் விருதினை பெற்றார் மற்றும் பத்ம விபூஷன் விருதையும் பெற்றார் அதனைத் தொடர்ந்து, சிறந்த பாலிவுட் விருது, பிடிசி பாலிவுட் வணிக விருதுகள், ஐரோப்பிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், IIFA விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள் தயாரிப்பாளர் சங்க திரைப்பட விருதுகள் என பல விருதுகளை பெற்றார். இப்படிப்பட்ட அமீர்கான் ஒரு படத்திற்கு சம்பளமாக "ரூ.100 கோடி முதல் ரூ.275 கோடி" வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

மீதமுள்ள இடங்களில், "ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி" வரை சம்பளம் பெற்று 'நடிகர் பிரபாஸ்' ஆறாவது இடத்திலும், "ரூ.105 கோடி முதல் ரூ.165 கோடி" வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று "நடிகர் அஜித்குமார்" ஏழாவது இடத்திலும்,

"ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி" வரை பெற்று 'சல்மான் கான், கமல்ஹாசன்' ஆகியோர் எட்டாவது இடத்திலும், "ரூ.60 கோடி முதல் ரூ.145 கோடி" வரை சம்பளம் பெற்று 'அக்ஷய் குமார்' ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: என் ஹார்ட் ட்ரைவ்-ஐ திருப்பிக் கொடுங்கள்.. பெப்ஸி அலுவலகத்தில் நடிகை சோனா திடீர் உண்ணாவிரதம்..!