மீண்டும் காதலில் விழுகிறார் அமீர்கான்..! 60 வயதில் 25 ஆண்டு கால தோழி கௌரியுடன் 'டேட்டிங்'..!
ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆன பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தற்போது மீண்டும் காதலில் விழுந்திருக்கிறார்.
60 வயதான அமீர்கான் தனது 25 ஆண்டு கால தோழி கௌரி ஸ்பிராட் உடன் டேட்டிங் செய்வதை உறுதி செய்து இருக்கிறார். கௌரி ஆறு வயது சிறுவனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அறுபதாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ஊடகங்களுடன் இந்த தகவலை அமீர்கான் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், 25 ஆண்டு கால தோழியான கௌரியை கடந்த ஓராண்டாக டேட்டிங் செய்து வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கௌரி தற்போது பெங்களூரில் வசிக்கிறார். ஆறு வயது மகனின் தாயார் ஆன கௌரியுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தனது குடும்ப உறுப்பினர்களை ஏற்கனவே கௌரி சந்தித்து பேசியதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மதுரை முத்து கூறிய ஒற்றை வார்த்தை.. மதுரையை அலற விட்ட ரசிகர்கள்..!
60 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல கான் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த உறவில் தான் உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறிய அமீர்கான் தனது காதலி கௌரி, 'லகான்' மற்றும் 'டங்கள்' உள்ளிட்ட தனது ஒரு சில படங்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும் கூறினார். தனது சூப்பர் ஸ்டார் முத்திரையில் துணைவியாருக்கு (கௌரி) நம்பிக்கை இல்லை என்பதை நினைவு கூர்ந்த அமீர்கான், "தன்னை பாலிவுட் பைத்தியக்காரத்தனத்திற்கு" இனி தான் அர்ப்பணித்துக் கொள்ள கௌரி முயற்சிப்பதாகவும் நகைச்சுவையோடு தெரிவித்தார்.
கௌரி பாதி தமிழர்; பாதி ஐரிஷ் என்றும் அவரது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து கொண்டார்.
அமீர்கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். திரைப்பட தயாரிப்பாளரான கிரண் ராவும் அமீர் கானும் கடந்த ஜூலை 2021 இல் விவாகரத்தை அறிவித்தனர். இவர்களுக்கு ஆசாத் ராவ்கான் என்ற மகன் இருக்கிறார்.
அதற்கு முன்பாக ரீனா தத்தாவை கடந்த 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். 2002 ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் இரா கான், மகன் ஜுனைத் கான்.
யார் இந்த கௌரி? - தாயார் தமிழர்!
இந்த நிகழ்ச்சியின் போது கௌரியின் தொழில் வாழ்க்கை குறித்து கேட்டபோது பெங்களூருவில் வசித்து வரும் கௌரி, தற்போது அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் திரைப்படத்துறையிலும் பல்வேறு அம்சங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.
"இப்போது ஒரு புதிய திருப்பம்... கௌரி ஆறு வயது மகனுக்கு தாய் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அவரது தாயார் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ஐரிஷ் (அயர்லாந்து). தனித்துவமான கலாச்சார பின்னணி கொண்டவர் கௌரி" என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார் அமீர்கான்.
இதையும் படிங்க: ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!