×
 

ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!

தனது ஹனிமூன் பயணத்தில் அடுத்ததாக ஸ்ரீலங்காவிற்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. 

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து தனது பெயரை இந்தியா முழுவதும் நிலைநாட்டி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்து இன்று வரை தனது நடிப்பை வெளிக்காட்டி வரும் கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை கோவாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, தற்பொழுது ஹனிமூனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிராமண முறைப்படி நடந்த திருமணத்திற்கு பிறகு, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து, பார்ட்டிகளுக்கும்  தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து ஹனிமூனில் பல ஹீரோயின்களின் வயிற்றை புண்ணாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: அடுத்த ஹனிமூனுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்.. வெட்கத்தில் சிவந்த அழகிய முகம்..!

இந்த சூழலில், ஹனிமூனின் அடுத்த பயணமாக இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி கொள்ளும் புகைப்படத்தையும், ஃப்லைட் டிக்கெட்டையும், இலங்கையில் தனது கணவருடன் என்ட்ரி கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில்,இலங்கைக்கு சென்ற கீர்த்தி சுரேஷை, சிறப்பு விருந்தினராக அழைத்த அங்குள்ள தொழிலதிபர் ஒருவர், அவரது கடையை திறந்து வைக்க சொல்லி இருக்கிறார். இதனால் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு கடையை திறக்க சென்ற கீர்த்தி சுரேஷுக்கு இலங்கை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

மேலும், காரில் இருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அங்கிருந்து கடைக்கு செல்லமுடியாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோத, ஒருவழியாக பவுன்சர்களின் உதவியுடன் கடையை சென்றடைந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் கடைக்குள் கீர்த்தி சுரேஷை அழைத்து செல்ல பவுன்சர்கள் பட்ட பாடு என்ன என்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தன்னிடம் புகைப்படம் எடுத்து கொள்ள நினைத்த ரசிகர்களை ஏமாற்ற நினைக்காத கீர்த்தி, மேடையில் ஒட்டு மொத்த ரசிகர்களுடன் க்யூட்டாக சிரித்தபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். 

இந்த புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் "கீர்த்தி எப்ப ஹனிமூன் முடித்துவிட்டு வீடு திரும்புவீங்க..சரி பராவாயில்லை மகிழ்ச்சியாக இருங்கள்" என பதிவிட்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: ஹனிமூன் வைஃப் போட்டோ... கிளாமரில் ஹார்ட் டச் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்...! ரசிகர்கள் ஆரவாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share