×
 

சரக்கு பார்ட்டியுடன் களைகட்டிய 90-ஸ் பிரபலங்களின் கெட் டூ கெதர்!

2025-ஆம் ஆண்டும் முதல் கெட் டூ கெதர் பார்ட்டியின் புகைப்படங்களை நடிகை மீனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரைபிரபலன்கள் தங்களுக்குள் ஓய்வு நாட்களில், ஒன்றாக சந்தித்து நட்பு பாராட்டும் விதமாக பார்ட்டி வைத்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.
 

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டின் முதல் கெட் டூ கெதர் பார்ட்டியை மஜாவாக கொண்டாடி உள்ளனர். 

ஸ்டார் ஹோட்டலில், நடந்த இந்த பார்ட்டியில் விஷால், சுந்தர் சி, மீனா யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க: காஞ்சிபுர பட்டு புடவையில்.. கழுத்து நிறைய நகை! மீனாவின் கலக்கல் பொங்கல் போட்டோ ஷூட்!!

அதே போல் குஷ்பூ மற்றும் நடிகை சங்கீதா கிரிஷ் இந்த பார்ட்டியில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.

அனைவருமே கருப்பு நிற ஆடையில் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

குறிப்பாக இந்த பார்ட்டியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டு... மது கிளாசு முன் நின்று நடிகை மீனா மற்றும் குஷிபுவுடன் நின்று கூலாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் சுப்பு பஞ்சு, தொகுப்பாளினி டிடி, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜாமாய்த்துள்ளனர் என்பது மீனா வெளியிட்டுள்ள போட்டோஸ் மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க: ‘பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்தார்..? த்ரிஷா அமைச்சராகப் போகிறார்..! மன்சூர் அலிகானின் வில்லங்கப் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share