×
 

ஜோரா ஹீரோயின்கள் வந்தாலும் ஜோதிகா போல வருமா...வயசானாலும் உங்க ஸ்டைல் உங்களை விட்டு போகல ஜோ...!

ஜோதிகாவின் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

எப்படி தமிழ் திரையுலகில் நீலாம்பரியை இன்றுவரை யாராலும் மறக்க முடியவில்லையோ, அதோ போல் சந்தரமுகியையும் யாராலும் மறக்க முடியாது.. அப்படிபட்ட நடிப்புக்கு சொந்த காரர் தான் நடிகை ஜோதிகா. இவரது நடிப்பில் உருவான சந்திரமுகி படத்தை பார்த்து விட்டு அவரது அம்மாவே ஜோதிகா அருகில் தூங்க பயந்திருக்கிறார் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும்.

இப்படிப்பட்ட நடிகை ஜோதிகா, "டோலி சஜா கே ரக்னா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர். தமிழிலில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் "வாலி" படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் தனது கணவரான சூர்யாவுடன் நடித்த முதல் திரைப்படம் "பூவெல்லாம் கேட்டுப்பார்".

இதையும் படிங்க: 46 வயதிலும் கண்ணை பறிக்கும் அழகு; ஸ்லீவ் லெஸ் உடையில் ஜோதிகா பகிர்ந்த போட்டோஸ்!

இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்த ஜோதிகா, தனது திருமணத்திற்கு பின் தனி கதாயாகியாக ராட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்கள் முன்னேற்றத்திற்கான படங்களில் நடித்து வருகிறார். முற்றிலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதாநாகனும் இல்லாமல் தனி ஸ்டாராய் படத்தில் கலக்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் மும்பையில் குடியேறி உள்ளனர். இதனை பற்றி சூர்யா கூறும்போது, எனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த 'ஜோ'வுக்காக நானும் எனது குழந்தைகளும் மும்பை வந்துவிட்டோம் என்றார்.

ஆனால் ஜோதிகா கூறும் பொழுது, தனது தாய் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, அவர்களை பக்கத்திலிருந்து பார்த்து கொள்ளவும், தமிழகத்தில் தங்கள் குழந்தைகைகளின் படிப்பிற்கு ஏற்ற பள்ளிகள் இல்லை என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் மும்பைக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.

தற்போது டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் ஜோதிகா, இதுவரை தனது ஜிம் புகைப்படத்தையும் அதில் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக தனது அழகான போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலா வர செய்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்திருக்கிறார். 

இவரது போட்டோக்களும், லுக்கால் மக்களை கவரும் போஸ்களும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்கிறது. 

இதையும் படிங்க: 46 வயதிலும் கண்ணை பறிக்கும் அழகு; ஸ்லீவ் லெஸ் உடையில் ஜோதிகா பகிர்ந்த போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share