×
 

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. கதையின் நாயகனாக யோகி பாபு!

தற்போது நடித்து வரும் படங்களை முடித்த பிறகு இயக்குநராக அவதாரம் எடுக்க ரவி மோகன் முடிவு செய்திருக்கிறார்.

மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்வதாக அறிவித்த பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ரவி மோகன் தொடங்கிவிட்டார். தற்போது ‘பராசக்தி’, ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு இயக்குநராக அறிமுகமாக ரவி மோகன் முடிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் அவதாரம் எடுப்பதற்காக, படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளிலும் ரவி மோகன் கவனம் செலுத்தி வருகிறார்.

முதல் படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க ரவி மோகன் உத்தேசிருக்கும்  இக்கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.

ரவி மோகனின் சகோதரர் ராஜா மோகன் ஏற்கனவே வெற்றிகரமான இயக்குநர் ஆவார். அவர் வழியில் இயக்குநராகும் ஆசையைப் பல்வேறு தருணங்களில் பேட்டிகள் வாயிலாக ரவி மோகன் வெளிப்படுத்தியிருந்தார். அப்படி அவர் இயக்கும் படத்தில்,  யோகி பாபு நடிப்பார் எனவும் ரவி மோகன் குறிப்பிட்டிருந்தார். 2025ஆம் ஆண்டிலேயே ரவி மோகன் இயக்கும் படத்தில் யோகிபாபு நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...!

இதையும் படிங்க: ரீரிலீசாகும் கண்ணாமூச்சி ரே...ரே.., ஓய் மலபார்.. படங்கள்...! அடுத்து டபுள் ட்ரீட் தான் போங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share