×
 

ஐடி பிடியில் எஸ்.ஜே.சூர்யா... நம்பிக்கையை உடைத்த நீதிமன்றம்.. இனி எல்லாம் அதிகாரிகள் கையில்..!

நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர் வருமானவரி துறையினர்.

வாழ்க்கையில் திறமைகளை மட்டும் வைத்து முன்னேறிய பல இயக்குநர்கள் உண்டு. அந்த வரிசையில் காலில் செருப்பு கூட இல்லாமல் வழி செலவுக்கு பணம் கூட இல்லாமல், நடந்தபடியே தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான், இன்று அனைவராலும் போற்றப்படும் எஸ்.ஜே.சூர்யா. இவரது திறமையைக் கண்டு உற்சாகமடைந்த நடிகர் அஜித், அவருக்கு காலணிகளையும், காரையும் முதலில் பரிசாக அளித்தார் என்பதை எந்த மேடையில் ஏறினாலும் மறக்காமல் கூறுவார் எஸ்.ஜே.சூர்யா. 

இவர் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய முதல் படமான "வாலி" படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் "குஷி" படத்தை இயக்கியிருந்தார், இந்த இரண்டு படமுமே எஸ்.ஜே.சூர்யா என்ற பெயரை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க அடித்தளமாக இருந்தது.

இதையும் படிங்க: வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு.. மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'மாநாடு'

இதனைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும்.. தற்பொழுது இவர் நடித்து வரும் எந்த படமாக இருந்தாலும் அது ஹிட் படமாகவே மாறி வருகிறது. அந்த அளவிற்கு இவரது உழைப்பும் நடிப்பும் அந்த படத்தில் வெகுவாக இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் விஜய்க்கு டப் கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் மாநாடு திரைப்படத்தில் "வந்தான் செத்தான் ரிப்பீட்டு" என்ற டயலாக்கை பேசி  ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். மேலும் டான், கடமையை செய், வாரிசு, பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராயன், இந்தியன் 2, சரிபோதா சனிவாரம் போன்ற படங்களில் நடித்து, இன்று தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே தமிழ் சினிமாவில் பிடித்து உள்ளார். 

இப்படி வாழ்க்கையில் எந்த அளவுக்கு உயர்ந்தாலும் அரசாங்கத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என்றால், அந்த உயரத்தில் இருந்து கீழே இறக்கி விடுவார்கள் அரசாங்க ஊழியர்கள். ஏற்கனவே இயக்குனர் சங்கர் எடுத்த எந்திரன் திரைப்படம் வேறொருவரின் கதை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்பொழுது அமலாக்க துறையினரால் அவரது ரூ.10 கோடி அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் வருமானவரி துறையினரிடம் சிக்கி தவிக்கிறார்.

இயக்குநராக இருந்ததைவிட, தற்பொழுது ஹீரோக்களுக்கு இணையாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, தான் ஈட்டிய வருமானத்திற்கு, அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய ரூபாய் 7 கோடியே 57 லட்சம் வரியை அரசாங்கத்திற்கு செலுத்தவில்லை என வருமானத்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு மனுவை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் முன்பாகவே மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், இந்த மனு  '467' நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளனர்.

இதனால் தற்பொழுது வருமானவரித்துறையினரின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share