×
 

வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு.. மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'மாநாடு'

நடிகர் சிம்பு பிறந்த நாளையொட்டி, அவர் நடித்த 'மாநாடு' திரைப்படம் நாளை (ஜன.31) ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

நடிகர் சிம்பு நடித்து, வெங்கட் பிரபு இயக்கிய  ‘மாநாடு’ திரைப்படம் 2021 நவம்பர் 25இல் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 117 கோடியை இப்படம் வசூலித்தது. தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு சிம்புவுக்கு இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.  ‘டைம் லூப்’ ஜானரில் வெளியான இப்படம், நடிகர்கள் சிம்புவுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தான். எஸ்.ஜே. சூரியாவின், "வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு" வசனம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.  இந்நிலையில் இப்படம் நாளை (ஜன.31) மீண்டும் வெளியாகிறது. நடிகர் சிம்புவுக்கு பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்தநாள், இதையொட்டி,  இப்படம் நாளை திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதுதொடர்பாக எஸ்.ஜே. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிம்பு 2021இல் படத்தின் டப்பிங்போது வெளியிட்ட வீடியோவை டேக் செய்துள்ள எஸ்.ஜே. சூர்யா, “நாளை முதல் மீண்டும் மாநாடு (வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு ) அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா. நன்றி வெங்கட் பிரபு சார் அண்ட் டீம்” எனப் பதிவிட்டுள்ளார், எஸ்.ஜே. சூரியா.

இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கக்கேடானது... கோபத்தில் கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share