×
 

சைவ உணவுக் கொள்கையை விஜய் பரப்புகிறார்... சர்ச்சையில் ப்ளூ சட்டை மாறன்...!

முன்னாள் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் மட்டுமல்லாது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு எந்த படம் வந்தாலும் அதனை விமர்சிப்பதில் ப்ளூ சட்டை மாறன் கைதேர்ந்தவர். படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட  ஒரு நிமிடம் பொறுத்து ப்ளூ சட்டை மாறன், என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு பின்பு படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த அளவிற்கு ப்ளூ சட்டை மாறன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் கொடுக்கும் ரிவ்யூக்களுக்கு மக்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், தற்பொழுது இவர் ரிவ்யூ சரியாக இருக்கும் என்ற வழக்கம் மாறி உள்ளது. 

இப்படி இருக்க நடிகர் விஜய், கடந்த ஆண்டு விக்கிரவாண்டில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில், தனது பலத்தை காமித்து அனைத்து கட்சிகளிடம் தனது பலத்தை காமித்து இருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் "ஜனநாயகன்" திரைப்படத்துடன் தன்னுடைய திரையுலக பயணத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜயின் அரசியலால் மகன் சஞ்சய்க்கு சிக்கல்.. 3 நாளில் பேக்கப் ஆன சூட்டிங்... லைகா அதிரடி முடிவு..?

இந்த சூழலில், தவெக கட்சியில் பலரும் இணைந்து வரும் நிலையில், பாஜக முன்னாள் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் ஒருவர் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர் யார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கட்சி துவக்க விழா, முதல் மாநாடு, இரண்டாம் ஆண்டு விழா,கல்வி விருது விழா, போன்ற எல்லா விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்ளுகிறார் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் அங்கு சைவ உணவு மட்டுமே காணப்படுகிறது என்ற பேச்சுக்கள் முன்பே எழுந்து வந்த நிலையில், தற்பொழுது, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் அளவிற்கு பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், அங்கு இன்று மதிய உணவாக, வெஜ் பிரியாணி சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், கேரட் அல்வா, ஐஸ்கிரீம் என ஒட்டுமொத்தமாக 21 ஐட்டங்கள் ரெடியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு பூதாகரத்தை ஏற்படுத்தி உள்ளது . அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும் சைவம் தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம் அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம். கலந்து கொள்பவரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்பகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள்.

ரஜினி, கட்சி ஆரம்பிக்கப் போவதாக பரபரப்பை கிளப்பிய காலத்தில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் மதுரை ரசிகர்களை சந்தித்தார், அப்போது உங்களுக்கு அசைவ உணவு போட ஆசை, ஆனால் இது சைவ மண்டபம் என கூறினார். பக்கத்தில் வேறு மண்டபம் அல்லது வேறு இடத்தை புக் செய்து அவர்களுக்கு அசைவ உணவு பரிமாறுவதில் என்ன பிரச்சனை?. பல மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு  தொண்டர்களுக்கும் சைவம் மட்டுமே பரிமாறினார் ரஜினி.அப்போது இது சர்ச்சையை கிளப்பியது.

அவரைப்போல விஜையும் பாஜகவின் உணவு முறையை பின்பற்றுவது போல இருக்கிறது. தனது மேலிடத்துக்கு உணவு கொள்கையை தவெக தொண்டர்கள் மற்றும் ஊக்கத்தொகை பெற வரும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரின் மீது திணிக்கிறாரா விஜய்?" என ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது தற்பொழுது தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே விஜய் பாஜகவின் கைக்கூலி என பலரால் பேசப்பட்டு வந்தாலும், தற்பொழுது ப்ளூசட்டைமாறன் கேட்டிருக்கும் கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share