×
 

விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...! 

விடாமுயற்சி படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் விஜயின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

விடாமுயற்சி படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் விஜயின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், ஆரவ், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான  ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்த நிலையில், அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் வெளியாவதால் ஃபுல் செலிபிரேஷன் மூடில் இருந்த ஏகே ஃபேன்ஸ், கொண்டாடி தீர்த்தனர்.  அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து, தாரை தப்பட்டைகள் முழங்க கூத்தடித்தனர். 

இதனிடையே, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டினர். அந்த நன்றியை மறக்காத விஜய் ரசிகர்கள் இன்று பதிலுக்கு 2 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெற வேண்டி போஸ்டர் ஒட்டியிருந்தனர். தமிழ் திரையுலகில் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே ஆரோக்கியமான சூழ்நிலை வளர்ந்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வந்த நிலையில், தற்போது இதை எல்லாம் சுக்கு நூறாக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் வைத்த பேனர் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: விடாமுயற்சியோடு உயிர் காக்கும் சேவை... ஒன்றிணைந்த தல - தளபதி ஃபேன்ஸ்!

திண்டுக்கல்லில் 7 தியேட்டர்களில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் வைத்த பேனர் தான் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் “கோட்டையும் வேண்டாம்... கொடியும் வேண்டாம்...” என வித்தியாசமான வாசகம் அடங்கிய பேனர்களை வைத்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் விஜய்யை வம்பிழுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தளபதி விஜய் கட்சி ஆரம்பித்து, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார்.  சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற விஜய் தீர்மானித்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பயணத்தை விமர்சிக்கும் வகையில் இந்த பேனரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சீமானுக்கு பெரியார் தேவைப்படுகிறார்... நறுக்கென்று பதிலளித்த ஆர். பார்த்திபன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share