×
 

பட வாய்ப்புக்காக இப்படி? கவர்ச்சிக்கு தாவிய பிரியங்கா மோகன் போட்டோஸ்!

இதுவரை தமிழில் ஹோம்லி வேடங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா மோகன்... தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து வருபவர் பிரியங்கா மோகன்.
 

தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக, கேங் லீடர் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

இதை தொடர்ந்து இந்த அழகு தேவதையை அலாக்காக தூக்கி வந்து, தமிழில் நடிக்க வைத்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

இதையும் படிங்க: அர்ஜுன் 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இயக்கிய டாக்டர் படத்தில், பிரியங்கா மோகன் நடித்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டியது.

அந்த வகையில் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவர், தனுஷுடன் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்த 'பிரதர்' திரைப்படம் வெளியானது.

மேலும் தெலுங்கு திரையுலகிலும் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுவரை ஹோம்லி வேடங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா மோகன், கிளாமர் ரோலுக்கு மெல்ல மெல்ல காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தற்போது டர்கி நாட்டுக்கு வெக்கேஷன் சென்றுள்ள நிலையில், இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதுவரை படங்களில் கிளாமர் காட்டாமல் இருந்த பிரியங்கா மோகன் போட்டோக்கள் மூலம் தனது கவர்ச்சி அளப்பறையை துவங்கி உள்ளார். அதன்படி, இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிரியங்கா கவர்ச்சியான வேடங்களில் நடிக்க ஓகே சொல்லும் விதமாகவே இப்படி புகைப்படங்கள் வெளியிடுவதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
 

இதையும் படிங்க: விஜே பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! மாப்பிள்ளைக்கு தான் கொஞ்சம் வயசு அதிகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share