குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் எலகென்ட் போட்டோஸ்!
ரம்யா பாண்டியன் ஆஃப் சேரியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டம்மி டப்பாசு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
ஜோக்கர் படம் வெகுளி, எதார்த்தமான கதாபாத்திரமாக ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கவே ஆண் தேவதை என்ற படத்தில் மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார்.
இதையும் படிங்க: CSK ஆட்டத்தை பார்க்க வந்த AK... கூடவே இருந்த SK; உற்சாகத்தில் ரசிகர்கள்!!
அதன் பிறகு ராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். ஆனால் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. முகிலன் என்ற வெப் சீரிஸிலும் Accidental Farmer and Co என்ற வெப் சிரீஸிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 2ஆவது ரன்னராக இடம் பிடித்தார்.
இந்த ரியாலிட்டி ஷோ மூலமாக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதே போன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த ஷோவில் 3ஆவது ரன்னராக இடம் பிடித்தார்.
இந்த நிலையில் தான் எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில் போட்டோஷூட்டும் நடத்தினார்.
அப்படியும் வாய்ப்புகள் வராத நிலையில் யோகா மாஸ்டரான லவன் தவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ரிஷிகேஷில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஃப் சேரியில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் குடும்ப குத்துவிளக்காக ரம்பா பாண்டியன் போஸ் கொடுத்துள்ளார். ஊஞ்சலில் ஆடுவது, காலில் கொலுசு போடுவது, விளக்கேற்றுவது என்று சும்மா அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கருமை நிற உடையில் ஜொலிக்கும் அழகில்..! நடிகை கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்..!