×
 

தமிழ் புத்தாண்டை பச்சை நிற பட்டு புடவையில்... பயபக்தியோடு கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் இந்த ஆண்டு புத்தாண்டை ஒளிமயமாக்கும் விதத்தில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க கூடிய நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
 

கடந்த ஆண்டு தன்னுடைய இளம் வயது நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட சாக்ஷி அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: 'ஃபயர்' சாக்ஷி அகர்வாலின் திரையுக வாழ்க்கையில் புதிய உச்சம்!

அந்த வகையில் இவர் நடிப்பில் ரிலீஸ் ஆன ஃபயர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சாக்ஷி அகர்வாலின் கணவர், திருமணத்திற்கு பின்னரும் இவருடைய நடிப்புக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் சில படங்கள் உள்ளன.
 

இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது தமிழ் புத்தாண்டை ஒளிமயமாக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாகி வருகிறது.

 

கோவிலில் இருந்தபடி தான் இந்த போட்டோ ஷூட்டை சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ளார். குடும்ப குத்துவிளக்காக தலை நிறைய மல்லி பூ வைத்து, பச்சை நிற பட்டு புடவையில் பேரழகியாக மின்னுகிறார்.
 

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு... குதூகலமாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share