×
 

என்னா மனுஷன் சார்... கார் ரேஸுக்கு முன்பு அஜித் செய்த செயல்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்...! 

ஸ்பெயினில் கார் பந்தயத்திற்கு முன்னதாக ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, அவரது குழந்தையின் பிறந்தநாள் கேக்கை அஜித் வெட்டியுள்ளார்.

ரேஸ் பிரியரான அஜித்குமார் அவ்வப்போது தனது படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுத்துவிட்டு கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த போட்டியில் உடல் நல பிரச்சனைகள் காரணமாக கார் ஓட்டுவதில் இருந்து விலகிய அஜித், அணியின் உரிமையாளராக மட்டுமே தொடர்ந்தார். 

அதனையடுத்து ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரே நேரடியாக பங்கேற்றார். ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்த கார் ரேஸில், 6வது சுற்றின் போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற அஜித்குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அவரது கார் மூன்று முறை சுழன்று பயங்கர விபத்துக்குள்ளானது. ஆனால் அதனை சமாளித்துக் கொண்டு நடிகர் அஜித்குமார் காரை தொடர்ந்து ஓட்டினார். ஆனால் இந்த பந்தயத்தில் அவருக்கு 14வது இடம் தான் கிடைத்தது. ஆனாலும் அவரது ஈடுபாடு, அர்ப்பணிப்புக்காக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கடந்த 60 நாட்களில் அஜித்துக்கு இது போன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். 

இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...!

தற்போது அந்த ரசிகர்களை குஷியாக்கும் வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஸ்பெயினில் கார் பந்தயத்திற்கு முன்னதாக ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, அவரது குழந்தையின் பிறந்தநாள் கேக்கை அஜித் வெட்டியுள்ளார். வீடியோ முழுக்க சிரித்த முகத்துடன், குழந்தையை குதூகலமாக அஜித்குமார் வாழ்த்தும் காட்சிகளைப் பார்த்து அவரது ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்போதெல்லாம் பட புரோமோஷனுக்கு வரும் நடிகர், நடிகைகள் கூட செல்ஃபி கேட்டால் போனை தட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தான் மிகவும் நேசிக்கும் கார் ரேஸுக்கு செல்லும் முன்னதாக ரசிகரின் கோரிக்கையை ஏற்று அவரது குழந்தைக்கு கேக் வெட்டியதை பார்த்த அவரது ரசிகர்கள், “என்ன மனுஷன் சார்.. கிரேட்” என புகழ்ந்து வருகின்றனர். 

 

தன் ரசிகரின் குழந்தையின்
பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அஜித் குமார்
HBD #ரேயா 😍

|#AjithKumar #AjithKumarRacing #GoodBadUgly pic.twitter.com/dhh1ALFJgW

— AJITHKUMAR TEAM ONLINE (@AkTeamOnline) February 24, 2025

இதையும் படிங்க: போர்ச்சுகலில் அதிகாலையில் பரபரப்பு… அஜித்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share