ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை மற்றும் அதற்கான காரணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விலையைக் கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை மற்றும் அதற்கான காரணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விலையைக் கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயர்ச்சி படம் கடந்த 6 ஆம் தேதி வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனுடன், அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான டீசர் தான். குட் பேட் அக்லி டீசரில் அஜித் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
'தி குட் பேட் அக்லி' படத்தின் டீசர் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. வெளியான 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளைப் பெற்ற டீஸர் என்ற பெருமையை குட் பேட் அக்லி பெற்றது. முன்னதாக, விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. குட் பேட் அக்லி டீசர் ஒரே நாளில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் இதை கவனிச்சீங்களா.. தலை சுத்த வைத்த அஜித்!!
குட் பேட் அக்லி டீஸர் நிறைய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் அஜித்தின் பழைய படங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. நெட்டிசன்கள் அவற்றை டிகோட் செய்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது இன்னொரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை கண்டுபிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டீசரில் அஜித் அணிந்திருக்கும் வெள்ளை நிற விண்டேஜ் சட்டையின் விலை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம். இது மோசினோ கூச்சர் என்ற இத்தாலிய பிராண்டின் சட்டை. இந்த சட்டை பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அதன் விலை லட்சக்கணக்கில் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அஜித் அணியும் ஒரு சட்டையின் விலை இவ்வளவு என்றால், அந்தப் படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னா மனுஷன் சார்... கார் ரேஸுக்கு முன்பு அஜித் செய்த செயல்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்...!